'ஊடகத்துறை சட்டங்களும் ஊடக ஒழுக்கவியலும்' எனும் தொனிப்பொருளிலான பயிற்சிச் செயலமர்வு

பி. முஹாஜிரீன், எம்.வை.அமீர்-

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் ஏற்பாட்டில் இலங்கை சட்ட உதவி ஆணைக்குழுவினால் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான 'ஊடகத்துறை சட்டங்களும் ஊடக ஒழுக்கவியலும்' எனும் தொனிப்பொருளிலான ஒரு நாள் பயிற்சிச் செயலமர்வு இன்று (08) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவையின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஏ. பகுர்தீன் தலைமையில் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சட்ட உதவி ஆணைக்குழுவின் செயற்திட்ட முகாமையாளர் நிசாந்தினி இரட்ணம், சட்ட உதவி ஆணைக்குழுவின் சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் எம்.எம்.ஏ. சுபைர், சட்ட ஆலோசகர்களான எம்.எச். ஹஸ்ஸான் றுஸ்தி, எல். குலைவாசனா, திட்ட உத்தியோகத்தர் பி.எம்.கலாமுதீன் மற்றும் பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவின் முறைப்பாட்டு அதிகாரி அமீர் ஹூஸைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இச்செயலமர்வில் வளவாளர்களால் 'ஊடகச் சட்டங்களும் ஒழுக்கவியலும், தகவலறியும் சட்டம், அறிக்கையிடல் மீதான அவதூறு, புலனாய்வு அறிக்கையிடல் படைப்பாக்க எழுத்தாற்றல்' போன்ற தலைப்புக்களில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டதுடன் இதில் பெருமளவான ஊடகவியலாளர்களும் கலந்து கொண்டனர்.
















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -