எகிப்திய இஸ்லாமிய விவகாரங்களுக்கான உயர் சபையின் அவ்காப் அமைச்சின் விசேட அழைப்பில் பேரில் சென்றுள்ள முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் இன்று காலை எகிப்து நாட்டின் கெய்ரோ விமான நிலையம் சென்றடைந்தார்.
எகிப்திய இஸ்லாமிய விவகாரங்களுக்கான உயர் சபையின் அவ்காப் அமைச்சின் ஏற்பாட்டில் சவால்களை எதிர் கொள்வதில் அரபு இஸ்லாமிய உலகில் மார்க்க நிறுவனங்களின் பங்கு – சுய விமர்சனமும் தலைப்புக்கான ஆய்வும் எனும் தொனிப் பொருளில் எகிப்தில் நாளை, நாளை மறுதினம் 14, 15 ஆம் திகதிகளில் 26 வது பொது மாநாடு இடம்பெறவுள்ளது
இந்த மாநாட்டில் கலந்து கொள்ளுவதற்காக விசேட அழைப்பில் பேரில் சென்றுள்ள கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் மற்றும் அமைச்சரின் சிரேஷ;ட ஆலோசகர் ஏ. சீ. எம். பாரூக் அவர்களும் இன்று காலையில் எகிப்து கெய்ரோ விமான நிலையத்தில் சென்றடைந்தனர். அதன் போது பங்களதேஷ;, மாலைதீவு ஆகிய நாடுகளின் முஸ்லிம் விவகார அமைச்சர்களும் இணைந்து எடுத்துக் கொண்ட படங்களை இங்கு காணலாம்.
அத்துடன் விமானம் செல்லும் வழியில் ஐக்கிய அரபு எமிரேட் தரையிறங்கிய போது ஐக்கிய அரபு இராச்சிய எமிரேட் இலங்கைக்கான தூதுவர் எம் முகைதீன் அமைச்சரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.