ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு...

கொழும்பு ஜனாதிபதி மாவத்தையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லம் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது.

1972 ஆண்டு இலங்கை குடியரசாக அறிவிக்கப்படும் வரையில் குறித்த இல்லம் “ராணி மாளிகை” என வர்ணிக்கப்பட்டது. அதன் பின்னர் இலங்கையை ஆட்சி செய்த அனைத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிகளும் இந்த இல்லத்தில் வாழ்ந்துள்ளனர்.

என்றாலும் இறுதியாக ஆட்சி செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் குறித்த உத்தியோகபூர்வ இல்லத்தில் தேவைக்கு அதிகமான அபிவிருத்திகள் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியதுடன், நிலக்கீழ் மாளிகைகள் தொடர்பிலும் செய்திகள், புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையிலேயே ஊழல்களுக்கு எதிரான நல்லாட்சி எனும் தொனிப்பொருளில் ஆட்சிபீடமேறிய தற்போதைய அரசு, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தை பொது மக்கள் பார்வைக்கு திறக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -