நாட்டிலே முன்பு இருந்தது போல் இருண்ட யுகம் மீண்டும் வர வரக்கூடாது என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தேசிய தலைவர் ரவுப் ஹகீம் அவர்கள் அண்மையில் குருநாகல் மாவட்டத்தில் நிக்கவெரட்டிய தொகுதியில் வெல்பொதுவெவ கிராமத்தில் கிராமிய நீர்விநியோக திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் குறிப்பிட்டார் .
மேலும் அங்கு அவர் உரியற்றுகையில்.
சமூகத்தின் உரிமை சம்பந்தமான விசயங்களிலும் எந்த விட்டுகொடுப்பும் இல்லாமல் மிக அவதானமாக இருந்து அந்த விசயங்களிலே எங்களுடைய பங்களிப்பை செய்கிற அதேநேரம் நாட்டிலே நல்லாட்சி மலரவேண்டும் நாட்டிலே முன்பு இருந்தது மாதிரி இருண்ட யுகம் மீண்டும் வரக்கூடாது என்பதற்காக எங்களுடைய ஜனநாயக விழுமியங்களிலே மாற்றங்களை கொண்டு வருவதற்கான புதிய சட்ட மாற்றங்களை சட்ட மூலங்களை கொண்டு வருவதற்கு முழுமையான பங்களிப்பை எங்களுடைய கட்சியும்,
எங்களுடைய கட்சியின் ஒவ்வொரு அமைப்புக்களிலும் அது சம்பந்தமாக விளக்கம் அளிக்கிற இளைஞர்களை அடுத்த சந்ததியினரை இந்த இயக்கத்தின் உண்மையான நோக்கங்களை அதனுடைய போராட்டங்களின் உண்மையான அனுபவங்களை அடுத்த கட்ட நகர்வுகளிலே நாங்கள் சவால்களை எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் எங்களுடைய அடுத்த பரம்பரையினரை பயிற்றுவிக்கிற முயற்சியிலும் ஈடுபடுவதனை ஒரு பிரதானமான குறிக்கோளாக கொண்டு நாங்கள் முன்சென்று கொண்டிருக்கிறோம்.
எனவே இந்த கட்டத்திலே இந்த கட்சிக்குள்ளும் வேண்டுமென்று புரளிகளையும் புரட்டுக்களையும் பிரச்சினைகளையும் உருவாக்கிய ஊருசிலர் வரிந்துகட்டிக்கொண்டு பக்கம் பக்கமாக கட்டுரை எழுதுகிறவர்களும் இருக்கிறார்கள் அவர்களை பற்றி நாங்கள் அலட்டிகொள்வதில்லை.
ஏன் என்றால் கட்சி ஒரு பெரிய இயக்கம் ஒரு சில குழப்பக்காரர்களினால் இந்த இயக்கத்தின் வேகத்தையோ அதனுடைய மக்கள் ஆதரவு தளத்தையோ பலவீனப்படுத்த முடியாது என்பதிலே நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். என்று தலைவர் ஹகீம் குறிப்பிட்டார்கள்.
இந்நிகழ்வில் வட மேல் மாகாண சபை உறுப்பினர்களான ரிஸ்வி ஜவஹர்ஷா, நியாஸ், தொகுதி அமைப்பாளர் ரிஸ்வி உட்பட பிரதேச மக்கள் பலரும் கலந்துகொண்டனர்