எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமம் ஊடாக அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதி மிக நீண்ட காலமாக குன்றும் குழியுமாக காணப்படுவதால் போக்குவரத்திற்கு இப்பிரதேச மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
சுமார் 02 கிலோமீட்டர் கொண்ட அக்கரைப்பற்று- அம்பாறை வீதி இப்பிரதேசத்திற்கு ஒரே ஒரு பிரதான வீதி, இவ்வீதியை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் கையெடுக்கப்பட்டு காபட் வீதியாக மாற்றுவதற்கான ஆரம்பிக்கப்பட்ட வேலைகள் முன்னெடுக்கப்பட்ட வேளையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதை அடுத்து கைவிடப்பட்டது.
இதனால் இவ்வீதியில் பல்வேறு இடர்பாடுகளுக்கு மத்தியில் போக்குவரத்துச் செய்வதினால் அடிக்கடி வீதி விபத்துகள் சம்பவிப்பதற்கு ஏதுவாக அமைந்துள்ளது.
இப்பாதையில் தபால் நிலையம், பாடசாலை, கமநலசேவை நிலையம், பிரதேச சபை, வங்கிகள், பிரதேச செயலகம், வைத்தியசாலைகள், நீர் வழங்கல் அதிகாரசபை பொலிஸ் நியைம் போன்ற அரச நிறுவனங்கள் அமைந்திருப்பதனால் நாளாந்தம் 1000க் கணக்கானோர் இவ்வீதியைப் பயன்படுதி வருகின்றனர்.
எனவே, மலர்ந்திருக்கும் புதிய நல்லாட்சிக்கான அரசாங்கம் இதனை கருத்திற் கொண்டு இடைநடுவில் கைவிடப்பட்ட பாதையினை மீள அபிவித்தி செய்வதன் மூலம் மக்கள் போக்குவரத்திற்கு வசதியான காபட் பாதையக மாற்றுமாறு மக்கள் ஆதங்கத்தினை வௌிப்படுத்தியுள்ளனர்.