புரவலர் புத்தகப் பூங்கா 36வது வெளியீடான பூகொடயூர் அஸ்மா பேகத்தின் செங்குருதியும் பச்சோந்தியும் கவிதைத்தொகுப்பு வெளியீட்டு விழா சமீபத்தில் பூகொடை குமாரிமுல்லை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் அவர்கள் முன்னிலை யில் நடைபெற்றது.
ஒய்வுப் பெற்ற அதிபர் எம்.எச்.எம்.மஸூத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் வரவேற்புரையினை பிரதி அதிபர் எம்.ஆர்;.எம் இர்ஷாத் நிகழ்த்த, வாழ்த்துரையை பாடசாலை அதிபர் எம்.எம்.எம். ஸர்ஜூன் நிகழ்த்தினார்.
நூலின் முதற்பிரதியினை பூகொட தொழில் அதிபர் அல்ஹாஜ் எல்.ஐ.ஏ.எம். ஸப்வான் அவர்கள் இலக்கியப் புரவலர் ஹாஷிம் உமர் அவர்களிமிடருந்து பெற்றுக் கொண்டார்.. கருத்துரைகளை சமூக ஜோதி எம்.ஏ.ரபீக், ஐடிஎன் செய்தி ஆசிரியர் அல்ஹாஜ் சீத்திக் ஹனிபா, ரஷித் எம். ரியாழ் ஆகியோர் ஆற்றினார்கள். மேமன்கவி சிறப்புரை ஆற்றினார்.
ஏற்புரையும் நன்றியுரையும் நூலாசிரியை அஸ்மா பேகம் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிகளை கணித ஆசிரியர் எம்.டி. இக்பால் நஸார் தொகுத்தளித்தார்.