பி.எம்.எம்.ஏ.காதர்-
வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபையின் மருதமுனைக் கிளையின் வழிகாட்டலில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கையேற்று அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபையிடம் ஒப்படைக்கப்பட்டள்ளது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபையின் மருதமுனைக் கிளையின் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி அவர்களின் வழிகாட்டலில் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் மருதமுனைக்கிளை, தவ்ஹீத் பிரச்சார மையம் மற்றும் பள்ளிவாசல் களினால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் ஒன்றிணைக்கப்பட்டு உலமாசபையின் மருதமுனைக் கிளையின் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி அவர்களின் ஒப்படைக்கப்பட்டது.
சுமார் பத்து இலட்சம் பெறுமதியான அரிசி,சீனி,பால்மாவகை, பருப்பு,டின்மீன்,நூடுள்ஸ்,தண்ணீpர் போத்தல்கள் உட்பட அத்தியவசியப் பொருட்கள் மருதமுனைக் கிளையின் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி தலைமையிலான உலமாக்கள் குழுவினர் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபையின் தலைமைக்காரியலயத்தில் செயலாளர் அஷ்செய்க் எம்.எம்.முபாறக் கபூரி,பொருளாளர் ஏ.எல்.எம்.கலீல் ஆகியோரிடம் கடந்த வியாழக்கிமை (26-05-2016) ஒப்படைக்கபட்டது.
இந்த பொருட்களை கொழும்புக்கு கொண்டு செல்வதற்கான செலவுகளை
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபையின் மருதமுனைக்கிளை, மருதமுனை மஸ்ஜிதுன் நூர்,மஸ்ஜிதுல் கபீர்,மக்பூலியா ஆகியா ஜூம்ஆ பள்ளிவாசல் பொறுப்பெற்றிருந்தன இந்த நிவாரணப் பொருட்களை மனமுவந்து வழங்கிய மருதமுனை மக்களுக்கும்,நிவாரணம் சேகரிப்பில் ஈடுபட்ட நிறுவனங்களுக்கும், சகோதரர்களுக்கும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாசபையின் மருதமுனைக் கிளையின் தலைவர் அஷ்செய்க் எம்.ஐ.ஹூசைனுதீன் றியாழி நன்றி தெரிவித்துள்ளார்.