கிழக்கு மாகாணத்திற்க்கான வாழ்க்கை தொழில் பயிற்சி மையம் திருகோணமலையில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாணத்திற்க்கான வாழ்க்கை தொழில் பயிற்சி மையம் திருகோணமலை செல்வநாயக புரத்தில் நேற்று (6) திறந்து வைப்பு.

கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தினால் நிறுவப்பட்ட இவ் வாழ்க்கை தொழில் பயிற்சி மையமானது கிழக்கு மாகாணத்தில் உள்ள வலுவிழப்புடன் கூடிய நபர்கள் மற்றும் நலிவுற்ற மக்களுக்கு தொழில் பயிற்சியை வழங்கும் நோக்குடன் 06.05.2016 இன்று கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளார் என். மணிவண்ணன் தலைமையில் திருகோணமலை ,செல்வநாயக புரத்தில் கிழக்கு மாகாண சுகாதார மற்றும் சமூக சேவைகள் அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கெளரவ விருந்தினர்களாக கி.மாகாண அமைச்சர்கள் எஸ். தண்டாயுதபாணி, வீ.ஜி.எம். ஆரியாவதி கலாபதி மற்றும் கி.மாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான அல்ஹாஜ் ஜே.எம்.லாகீர் அவர்களும் கலந்து சிறபித்துடன் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -