கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் நேவிஸ் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்தது..!

எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
ல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் ஒழுங்கு செய்திருந்த புளு நேவிஸ் சம்பியன் கிண்ணத்தை கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் சுவீகரித்தது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் அண்மையில் ( 27) இடம்பெற்ற அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த 23 கடினபந்து விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்ற 20 இற்கு 20 கிறிக்கட் சுற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை றினோன் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் 19.4 ஓவர்களில் 7 விக்கட்டுக்களை இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று 3 விக்கட்டுக்களினால் வெற்றி பெற்று புளு நேவிஸ் சம்பியன் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்போட்டியில் றினோன் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் அப்ரத் 26 ஓட்டங்களையும் பெற்றதுடன் , பிர்தௌஸ் 3 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார். லெஜன்ஸ் விளையாட்டுக்கழகத்தின் சார்பில் றிலாஸ் 42 ஓட்டங்களைப் பெற்றதுடன் அஸீம் 1 விக்கட்டையும் அப்ரி 2 விக்கட்டுக்களையும் நியாஸ் 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினார்கள்

அத்துடன் இப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக லெஜன்ஸ் கழகத்தைச் சேர்ந்த ஏ.எம்.றிலாசும் , தொடர் ஆட்ட நாயகனாக லெஜன்ஸ் கழகத்தைச் அப்ரி காரியப்பரும் தெரிவு செய்யப்பட்டனர். இறுதி நாள் கிறிக்கட் போட்டிக்கு அம்பாறை மாவட்ட கரையோர கிறிக்கட் மத்தியஸ்தர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஏ.டபிள்யு.எம்.ஜெஸ்மின் மற்றும் அஸ்பர் ஆகியோர் நடுவர்களாக கடமையாற்றினார்கள்.

இறுதிப் போட்டிக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றஸாக் ( ஜவாத் ) பிரதம் அதிதியாக கலந்து கொண்டார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -