முதலமைச்சர் விவகாரம்; அடுத்த ''ஜெனிவா'' அமர்வில் ஆப்பு - ஏ.எல்.தவம்

சப்னி

அண்மையில் சம்பூர் தமிழ் மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற கிழக்கு முதலமைச்சர் கடற்படை முகாம் தளபதி ஆகியோருக்கு இடையிலான நிர்வாக முரண்பாட்டினை எவ்வாறு அடுத்த ஜனீவா அமர்வில் மறைப்பீர்கள் என என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் கேள்வியெழுப்பியுள்ளார்.

அவர் மேலும் கேள்வியெழுப்புகையில்;

சம்பூர் முழுமையாக விடுவிக்கப்பட்டு விட்டது என கூறும் போது, எப்படி ஆயுதப்படையினர் பாடசாலைக்குள் வந்தனர்? அப்படி என்றால் சம்பூர் இன்னும் ஆயுதப்படையினர் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறதா? என்று ஜெனிவாவில் அடுத்த அமர்வில் கேள்வி வருமே. அதனை எப்படி சமாளிப்பீங்க..? அமரிக்க தூதுவர் கூடவே இருந்தாரே, எப்படி மறைப்பீங்க? என கேள்வியெழுப்பியுள்ளார்.

சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாப்போம் என்று உத்தவாதம் கொடுத்தீங்களே, இது எப்படி நடந்தது? அதுவும் சிறுபான்மைக்கான அதிகாரக் கையளிப்பின் அங்கமான கிழக்கு மாகாண சபை முதலமைச்சருக்கே எப்படி இப்படி நடக்க முடியும்?

அப்படி என்றால் மனித உரிமை ஆணையகத்தை, ஐ.நா சபையை, சர்வதேச சமூகத்தை ஏமாற்றுகிறீர்களா? என்று கேள்விகள் கணைகளாக அடுத்த ஜெனீவா அமர்வில் பாயாமல் இருக்க, இப்படியெல்லாம் சொல்லுவீங்க என்று எங்களுக்குத் தெரியும்.

கடற்படை கிழக்குத் தளபதியின் இடமாற்றமும் அதற்கான நடவடிக்கைதான் என்று எங்களுக்குத் தெரியும். பரவாயில்லை, இதனை இத்தோடு விடுவோம். மறப்போம். மன்னிப்போம் என மேலும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -