போக்கு வரத்து சபை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - சம்பவ இடத்திற்கு விரைந்த றிப்கான் பதியுத்தீன்

ன்று காலை மன்னாரில் இலங்கை அரச போக்குவரத்து சபை ஊழியர்களினால் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த வடமாகான சபை உறுப்பினர் றிப்கான் பதியுத்தீன் அவர்கள் பணியாளர்களை சந்தித்து ஆர்ப்பாட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்தார். 

ஆனபோதிலும் அங்குள்ள ஆர்ப்பாட்டக் காரர்கள் நாங்கள் இந்த பணிப் புறக்கணிப்பை நிறுத்த முடியாதன கூற இதற்கு காரணம் என்னவென வினவிய ரிப்கான் பதியுதீன் அவர்களிடம்:-

வடமாகான சபை உறுப்பினரே...! 

மன்னாரை பொருத்தவரையில் அநீதி இழைக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுக்க ஒன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் அவர்கள் வருகை தர வேண்டும் அல்லது நீங்கள் வர வேண்டும். ஏன்..? மன்னாரில் உள்ள மற்றைய அமைச்சர்களுக்கும் மாகான சபை உறுப்பினர்களுக்கும் இவ்வாறன பிரச்சனைகளில் கலந்து கொள்ள முடியாதா..? 

வாக்குகளுக்கு மட்டும்தான் அவர்களது நாக்கில் உரிமைக் குரல் எழும்புமா என கேட்டுவிட்டு இவ்வாறான சுயநலம் கொண்ட அரியல் வாதிகள் வாக்குகள் கேட்டு எங்களை ஏமாற்றுவதற்கு பதிலாக பிச்சை எடுக்கலாம் என ஆக்ரோசமாக தெரிவித்தனர்.

மேலும் இ.போ.ச ஊழியர்களால் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் மன்னாரில் உள்ள எந்த ஒரு அரசியல் பிரமுகர்களும் ஊழியர்களது குறைகளை நிவர்த்தி செய்ய எந்த நடவடிக்கைகளையும் எடுக்காத போது காலை 6.00 மணியளவில் ஊழியர்களை சந்திக்க வருகை தந்த ரிப்கான் பதியுதீன் அவர்கள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் அவர்களின் மூலம் தீர்வொன்றை பெற்றுக் கொடுத்தார்.

இதனால் ஆர்ப்பாட்டக் காரர்கள் வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களின் வருகையினை பாராட்டி வாழ்த்தினார்கள்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -