ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது என, காங்கிரஸ் கட்சியின் ஊடக தொடர்பாளர் குஷ்பு தெரிவித்துள்ளார். நாகர்கோவிலில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் கருத்துத் தெரிவிக்கையில், “தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணியை வெற்றி பெற செய்ய, தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்வதில், எந்த நெருடலும் இல்லை.
தி.மு.க. – காங், தேர்தல் அறிக்கையில், மக்கள் நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அ.தி.மு.க,வால் இன்னும் தேர்தல் அறிக்கையை தயாரிக்க முடியவில்லை. தி.மு.க, தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிக்கவில்லை.
தொழில் வளம் பெருகாததால்தான் தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டே தி.மு.க கூட்டணியின் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது.
தொழில் வளம் பெருகாததால்தான் தமிழகத்தில் ஒரு கோடி இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர். இதனைக் கருத்தில்கொண்டே தி.மு.க கூட்டணியின் தேர்தல் அறிக்கை அமைக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை ஜெயலலிதா நிறைவேற்றவில்லை. இதனால், இப்போதே ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் ஏற்பட்டு விட்டது. அதனால்தான் அதிகாரிகள் மாற்றத்தை எதிர்த்து மனு கொடுத்துள்ளனர். ” எனத் தெரிவித்திருந்தார்.