அட்டாளைசேனை கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கு பயிற்சி...!

மினுவான்கொடை நிருபர் -
மினுவான்கொடை பிரதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து இயங்கி வரும் கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் (College of Health Science) மருத்துவக் கல்லூரியின் புதிய கிளையொன்று அட்டாளைசேனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இயங்கி வருகிறது. 

இக்கல்லூரியில் கல்வி கற்கும் அனைத்து மாணவர்களும் மருத்துவ துறையில் பல்கலைக்கழகம் செல்ல தவறியவர்களாக இருப்பினும் கொலேஜ் ஒப் ஹெல்த் சயன்ஸ் கல்லூரியுடன் இணைவதன் மூலம் ஆயுர்வேத மருத்துவம், ஹோமியோபதி மருத்துவம், சித்தா மருத்துவம், மருத்துவ தாதி, மருத்துவ ஆய்வுகூட தொழில்நுட்பம், உளவியல், பாமஸி மருந்தாளர் போன்ற பல மருத்துவக் கற்கை நெறிகளை வெற்றிகரமாக செய்து வருகின்றனர். 

இங்கு அண்மையில் மாணவர்களுக்கான பயிற்சி பாசறையொன்றும் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்குகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சிகள் இடம்பெற்றது. இந்நிகழ்விற்கு கல்லூரியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் டாக்டர் எம்.எச்.எம்.முனாசிக் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 

இதில் மேலும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து நிகழ்வினை சிறப்பித்தனர். பயிற்சியில் பங்கு பற்றிய மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்லூரியின் நிர்வாகிகள் மற்றும் அதிதிகளை படத்தில் காணலாம்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -