ஹாசிப் யாஸீன்-
சர்வதேச புகைத்தல் - மது எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு வாழ்வின் எழுச்சி அபிவிருத்திதிணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள கொடி தினம் இன்று (31) செவ்வாய்க்கிழமைசாய்ந்தமருது பிரதேச செயலக வாழ்வின் எழுச்சி பிரிவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
சாய்ந்தமருது பிரதேச திவிநெகும முகாமையாளர் ஏ.சீ.ஏ.நஜீம் தலைமையில் இடம்பெற்றஇந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீமுக்கு முதல் கொடியினை திவிநெகுமஅபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சஹாப்தீன் அணிவித்து வைத்தார்.
இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ், கணக்காளர் எம்.எம்.உசைமா, உதவிதிட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.ஜஃபர்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.எம்.உதுமாலெவ்வை,திவிநெகும முகாமையாளர்களான எஸ்.றிபாயா, எம்.எஸ்.எம்.மனாஸ், உதவிமுகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.நூறுல்றிபா உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.