கல்முனை பொலிஸ் நிலையம் நடாத்தும் பொலிஸ் கிண்ண உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வு







PMMA காதர்-

ருதமுனை பறகத்டெக்ஸ் நிறுவனத்தின் அணுசரணையுடன் கல்முனை பொலிஸ் நிலையம் நடாத்தும்'விளையாட்டின் ஊடாக போதைவஸ்துப் பாவனையற்ற இளைஞர் சமூகத்தை உருவாக்கும் செயற் திட்டம்'என்ற தொனிப் பொருளில் பாடசாலை மாணவர்களுக்கிடையிலான உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டி-2016 நேற்று(12-05-2016)வியாழன் காலை 9.00 மணிக்கு கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபள்யு.ஏ.ஹப்பார் தலைமையில் நடைபெற்ற இந்தச் சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் அம்பாறை மாவட்டச் செயலாளர் சுசித பி வணிக சிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சுற்றுப் போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

இந்த நிகழ்வில் விஷேட அதிதிகளாக அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் அசோக தர்மசேன, கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.கே.டி.ஹேமந்த,கல்முனை இராணுவ முகாம் பொறுப்பதிகாரி லெப்டினன் கேரணல் ஜயசுந்தர,அம்பாறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சி.ஐ.இலங்கக்கோன்,கிழக்கு மாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் பி.ஐ.தர்மதிலக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு அதிதிகளாக கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளர் கே.லவநாதன்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம். அனுசரணையாளர் எம்.ஐ.ஏ.பரீட்(பறக்கத்டெக்ஸ்) ஆகியோருடன் அதிபர்கள் ஆசிரியர்கள் பொலிஸ் உத்தயோகத்தர்கள் பறகத் நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.

இச்சுற்றுப் போட்டியில் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை,மட்டக்களப்பு,திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பன்னிரெண்டு முன்னணிப்பாடசாலைகளைச் சேர்ந்த 19 வயதுக்குட்பட்ட மாணவர் அணிகள் பங்குபற்றின

முதலாவது போட்டி மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி அணிக்கும்,கிண்ணியா மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான போட்டி சந்தாங்கேணி மைதானத்தில் இடம் பெற்றது இப்போட்டியில் தண்டனை உதை மூலம் மூன்றுக்கு இரண்டு என்ற கோள் அடிப்படையில் கிண்ணியா மத்திய கல்லூரி அணி வெற்றி பெற்றது இப்போட்டிக்கு மத்தியஸ்தராக எஸ்.எல்.வை.அறபாத்; கடமையாற்றினார்.

இரண்டாவது போட்டி அம்பாறை சேனநாயக்க மத்திய கல்லூரி அணிக்கும்,மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணிக்குமிடையிலான போட்டி கல்முனை உவெஸ்லி மைதானத்தில் நடைபெற்றது இப் போட்டியில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி அணி மூன்றுக்குப் பூஜியம் என்ற கொள் அடிப்படையில் வெற்றி பெற்றது இப்போட்டிக்கு மத்தியஸ்தராக யு.எஸ்.சபீல் கடமையாற்றினார்.

மூண்றாவது போட்டி கல்முனை அல்-பஹ்ரியா மகாவித்தியாலய அணிக்கும் அக்கரைப்பற்று பாயிஷா வித்தியாலய அணிக்குமிடையில் சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெற்றது இப் போட்டியில் கல்முனை அல்-பஹ்ரியா மகாவித்தியாலய அணி இரண்டுக்கு ஒன்று என்ற கொள் அடிப்படையில் வெற்றி பெற்றது இப்போட்டிக்கு மத்தியஸ்தராக எஸ்.உவைஸ்தீன் கடமையாற்றினார்.

நான்;காவது போட்டி ஏறாவூர் அலிகார் மகாவித்தியலய அணிக்கும்.மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி அணிக்குமிடையிலான மற்றுமொரு போட்டி கல்முனை உவெஸ்லி மைதானத்தில் நடைபெற்றது இப் போட்டியில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி அணி ஒன்றுக்குப் பூஜியம் எனற கோள் அடிப்படையில் வெற்றி பெற்றது இப்போட்டிக்கு மத்தியஸ்தராக எம்.எம்.எம்.றியாஸ் கடமையாற்றினார்.

ஏனைய போட்டிகள் நடைபெற்று இறுதிப் போட்டி (13-05-2016) வெள்ளிக்கிழமை மாலை சந்தாங்கேணி மைதானத்தில் நடைபெறவுள்ளது இந்த இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு நிகழ்விலும் பிரதம அதிதியாக விளையாட்டத்துறை பிரதி அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் கலந்து சிறப்பிக்வுள்ளார்.

இச்சுற்றுப் போட்டியில் 1ஆம்,2ஆம் இடங்களைப் பெறும் அணிகளுக்கு பறக்கத் நிறுவனத்தின் அனுசரணையில் பொலிஸ் வெற்றிக்கிண்ணமும், சான்றிதளும்,விளையாட்டுச் சீருடைகளும் வழங்கப்படவுள்ளது மேலும் இப்போட்டியில் பங்குபற்றும் அனைத்து வீரர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதுடன் சிறந்த ஆட்டக்காரர்களுக்கான கிண்ணங்களும் வழங்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -