உகண்டா ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் கலந்துகொள்ள அந்நாட்டுக்குச் சென்ற மஹிந்த ராஜபக்ஷவின் முழுச் செலவும் அரசாங்கத்தினுடையது என தெரிவிக்கப்படுகின்றது.
உகண்டாவுக்கான உயர் சொகுசு வகுப்பு விமான டிக்கட் செலவு, வருவதற்கான செலவு என்பன மாத்திரம் 4 லட்சத்து 25 ஆயிரம் ரூபா எனத் தெரிவிக்கப்படுகின்றது.
மஹிந்த ராஜபக்ஷவின் பிரத்தியேக செயலாளர் உதித் லொகுகே, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சித்திராங்கனி விகிஷ்வரவுக்கு கடந்த மே மாதம் 5 ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில், மஹிந்த ராஜபக்ஷவின் உகண்டா விஜயத்துக்கான 11 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரையிலான சகல செலவுகளையும் அரசாங்கத்துக்குப் பொறுப்பேற்குமாறு வேண்டி கடிதம் அனுப்பியுள்ளதாகவும் சிங்கள ராவய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.