எம்.வை.அமீர்-
கிழக்கு மாகாணத்தை மையப்படுத்தி பல்வேறு அபிவிருத்திகளைச் செய்தவரும், விசேடமாக வடக்கும் கிழக்கும் பிரிவதற்கு பிரதான பங்காற்றியவருமான தேசிய காங்கிரஸின் தலைவர், ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வுடன் இணைந்து செயற்பட, நாபீர் பவுண்டேசன் உயர்மட்டம் பேச்சுக்களை நடத்திவருவதாக அறிய முடிகிறது.
கிழக்கில் சிதைவடைந்துள்ளதாக கூறப்படும் முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை சீர்படுத்தும் நோக்குடன் நாபீர் பவுண்டேசனின் ஸ்தாபகர் உதுமாங்கண்டு நாபீரும் தேசிய காங்கிரஸின் தலைவர் ஏ.எல்.எம். அதாவுல்லாஹ்வும் பேச்சுக்களை நடத்திவருவதாகவும் அறிய முடிகிறது.
இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதன் காரணமாக அங்கும் சிறுபான்மை என்ற கோதாவில் வாழாமல் கிழக்கையாவது நிறுவாகிற்பதர்க்கான வாய்ப்பை பெற்றுக்கொடுத்த முன்னாள் அமைச்சர் அதாவுல்லாஹ்வுடன் பிராந்தியத்தில் பல்வேறு உதவிப்பணிகளில் ஈடுபட்டுவரும் நாபீர் பவுண்டேசனும் இணையும் பட்சத்தில் எதிர்கால தேர்தல்கள் களைகட்டும் என்பதில் ஐயமில்லை.