கிழக்கு மாகாணத்தில் அதிகமான மக்களால் பரீட்சையமான ஓர் அரசியல் வாதியும் இலங்கையில் வளர்ந்து வரும் இளம் துடி துடிப்பான ஓர் சமூக நலவாதியும் தான் இந்த சிப்லி பாரூக்.
ஆரம்பத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினூடாக பிரதி அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் மூலம் அரசியலுக்குள் பிரவேசித்த சிப்லி பாரூக் அவர்கள் அக் கட்சியின் தலைவரின் சில கெடு பிடி போக்குகளினால் மக்களின் நலன் கருதி அக் கட்சியை விட்டு விலகிச் சென்றார் என்பதும் நாம் அறிந்ததே...
அதன் பிற்பாடு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைந்து கொண்டு தனது அரசியல் பயணத்தை பின் தொடர்ந்த சிப்லி பாரூக் ஓர் மாகாண சபை உறுப்பினருமாவார். கடந்த வருடம் நடை பெற்ற பொதுத் தேர்தலிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் தனது சொந்த ஊரான காத்தான் குடியில் களமிறங்கி தோட்கடிக்கப்பட்டார்.
ஆனால் அவரின் வாக்கு வங்கிகளும் அன்று ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஓர் பாராளு மன்ற ஆசனத்தை பெறுவதற்கு பக்க பலமாக இருந்தது என்பதை நாம் யாரும் மறந்து விடக் கூடாது.....?
காத்த மண் ஈன்றெடுத்த இந்த சிப்லி பாரூக் அவர்கள் ஓர் இளம் பொறியியளாலர் அது மட்டுமன்றி அரசியலுக்கு அப்பால் அனைவருக்கும் அவரை பிடிப்பதற்கு முக்கிய காரணமே மக்களோடு மக்களாக மக்கள் நலன் கருதி கல்வி, விளையாட்டு, தொழில் வாய்ப்பு மற்றும் தனி நபர் என்று யார் எந்த நிகழ்வுக்கு அழைப்பிதழ் விடுத்தாலும் முகம் சுழிக்காமல் மக்களோடு மக்களாக சென்று அரசியலுக்கு அப்பால் மனித நேயத்தோடு புண் முறுவலோடு அரசியல் செய்வதுதான் அநேக மக்களின் மனதில் இவர் இன்று இடம் பிடித்து இருப்பதற்கு முக்கிய பிரதான காரணமும் எனலாம்..
அடுத்து நபி வழியுடன் கூடிய அவருடைய முக பாவனையும் எம் இளைஞர்களுக்கு ஓர் எடுத்துக் காட்டு. இன்று எத்தனையோ மூத்த அரசியல் வாதிகள் அரசியல் ஞானிகள் எல்லாம் மறந்த ஓர் சுன்னாவை அரசியலுக்கு வந்த பிறகும் அதை நிலை நாட்டிக் கொண்டிருக்கும் ஓர் இளம் அரசியல் வாதி சிப்லி பாரூக்கிடம் மூத்த அரசியல் வாதிகள் நிறையப் பேர் அரசியலுக்கு அப்பால் நிறையவே கற்க வேண்டியிருக்கின்றது..
இன்று அநேக ஊடகங்களில் இவருடைய சேவைகளை நாம் காணக் கூடியதாக இருக்கின்றது. இன்று அநேக அரசியல் வாதிகள் மேடைகளில் வாய் நிறைய கத்தி விட்டு சென்று விடுகிறார்கள் பின்பு அடுத்த தேர்தலுக்குத்தான் அவர்களையே நாம் காணக் கூடியதாக இருக்கின்றது..
ஆனால் இவர் மக்கள் நலன் சேவைகளை பாடசாலை பாடசாலையாக வீடு வீடாக கடைத்தெரு கடைத்தெருக்களாக ஊர் விட்டு ஊர் சென்று தனது மக்களின் குறைகளை கேட்டரிந்து அதற்கான தீர்வை தனது அரசியல் கட்சியிலிருந்தோ அல்லது தனது மாகண சபை மூலமோ அதுவும் ஏலாத விடத்து அதற்கு பொருப்பானவர்கள் தன்னுடன் அரசியல் பகைமையாக இருந்தாலும் மக்களின் நலன் கருதி அதையெல்லாம் பொருட் படுத்தாது மக்களின் குறைகளை மட்டுமே எடுத்துக் கூறி அதற்கான தீர்வை பெற்றுக் கொள்ளும் ஓர் இளம் அரசியல்வாதியை காத்த மண் பெற்றிருக்கின்றது என்பது பெருமையே..
இவ்வாறு எந்ந வீத எதிர் பார்ப்புமின்றி தனது மாகாணசபை உறுப்பினர் பதவியை வைத்துக் கொண்டே ஓர் அமைச்சர் செய்யும் சேவையை விட படித்தவர்கள், பாமரர்கள் ஏழைகள், பணக்காரர்கள், மாணவர்கள், சிறுவர்கள் என்று எந்த வீத பாகு பாடுமின்றி மக்களோடு மக்களாக அவர்களின் குறைகளை கேட்டரிந்து அரசியல் செய்யும் சமூக நல வாதி எவ்வளவு மேல் என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்....?
தனக்கு அரசியல் ரீதியாக பகைமையாக இருக்கும் ஒருவர் கூட ஓர் சேவையை செய்து அது மக்கள் நலனுக்காக அமையுமிடத்து அதனை பாராட்டி சீராட்டி செல்லும் இளைஞர்களுக்கான ஓர் இளம் அரசியல் தலைமை என்றால் தற்போதய சூழ் நிலையில் அது பொருளியியலாளர் சிப்லி பாரூக்காகத்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கின்றேன்..
மார்க்கத்தையும் பற்றிப் பிடித்துக் கொண்டு அரசியலையும் தனது முழு நேர சேவையாக செய்ய முற்படும் இது போன்ற இளம் அரசியல் வாதிகள் யாராக இருந்தாலும் அவர்களை இளைஞர்களாகிய நாம் கண்டெடுத்து அவர்களை எம் முன்மாதிரியாக எடுத்து வாழ்வதோடு அவர்களுடன் கை கோர்த்து நாமும் அரசியலில் பயணிப்பதே சாலச் சிறந்து..
வை.எம்.பைரூஸ்,
வாழைச்சேனை,