நிவாரணம் வழங்கப்படவிருந்த பொருட்களில் ஊழல் நடைபெற்றுள்ளது -சஜித் பிரமதாஷ


ஏறாவூர் ஏஎம் றிகாஸ்-

ற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையினை அவதானிப்பதற்கென ஒருங்கிணைந்த எதிர்கட்சி என்று அழைக்கப்படும் குழுவினரால் நியமிக்கப்பட்டுள்ள விஷேட குழு முதலில் தங்களது ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய வேண்டும் என வீடமைப்பு நிருமாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

கடந்த காலத்தில் சுனாமி, வெள்ளம் போன்ற இதர அனர்த்தங்களின் போது நிவாரணம் வழங்கப்படவிருந்த பொருட்களில் ஊழல் நடைபெற்றுள்ளது அதனை ஆராச்சி செய்து பாதிக்கப்பட்ட மக்களின் முன் சமர்ப்பியுங்கள் என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு -மயிலம்பாவெளி காமாட்சி மாதிரி கிராம வீடுகள் கையளிப்பு நிகழ்வு (15.05.2016 ) நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்;.

தேசிய வீடமைப்பு அதிகாரசபை மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் பிரதியமைச்சர் இந்திக்க பண்டாரநாயக, எம்.எஸ்.அமீர்அலி, பாராளுமன்ற உறுப்பினர்களான அலிஸாஹிர் மௌலானா, ஞா.ஸ்ரீநேசன், கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம், மாவட்ட அரசாங்க அதிபர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வில் 25 பயனாளிகளுக்கு நிரந்தர வீட்டுக்கான சான்றிதழ்கள், 9 பயனாளிகளுக்கு காணிக்கான உறுதி, 300 பயனாளிகளுக்கு வீட்டுக்கடனுக்கான காசோலை, 50 பயனாளிகளுக்கு காணி அனுமதிப்பத்திரம், 200 பயனாளிகளுக்கு சீமேந்து பைகள் வழங்கப்பட்டன.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் - மட்டக்களப்பு மாவட்டம் போரினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாவட்டமாகும். இந்த மாவட்டத்தின் வீட்டுத் தேவையை பூர்த்தி செய்வதற்காகடி நல்லாட்சி அரசாங்கம் பாரியளவு நிதியை செலவிடுவதற்கு தயாராகவுள்ளது. எமது அரசாங்கம் இன மத மொழி என்ற பாராபட்சமின்றி சேவையாற்றுவதற்காக ஜனாதிபதியும் பிரதமரும் அற்பணித்து செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வாக்களித்து இந்த அரசாங்கத்தை உருவாகியுள்ளீர்கள் இனிமேல் ஒரு துப்பாக்கி அல்லது வெடிகுண்டுக் கலாசாரம் உருவாகாதவாறு உங்களை நாங்கள் பாதுகாப்போம்.

எமது நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் என பல இனத்தவர்கள் வாழ்கின்றார்கள் எந்த இனத்தவரும் எவ்வித பாரபட்சதட்துக்குட்படகூடாது. அவர் அவர்களது மொழி கலாசார தனித்துவத்துடன் வாழ்க்கூடிய சூலை எங்களது அரசாங்கம் உருவாக்கும். நாங்கள் அனைவரும் இந்த நாட்டின் குடி மக்கள் அனைவரும் ஒரே குடும்பம் போல் செயற்பட வேண்டும்.
எமது ஜனாதிபதி மற்றும் பிரதமரும் இணைந்து ஒரு சுபீட்சமான நாடாக கொண்டு செல்வதற்கான பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். இதனை சில குறுகிய மனப்பாங்கு கொண்டவர்கள் இந்த பயணத்துக்கு தடையை ஏற்படுத்துவது போன்று செயற்படுகிறார்கள்.

சௌபாக்கியமான இலங்கையை உருவாக்கும் முயற்சியில் பயணித்துக்கொண்டிருக்கும் எமது அரசாங்கத்தை எவராலும் தடை செய்ய முடியாது. எமது அரசை கவிழ்க்கவும் முடியாது என ஒருங்கிணைந்த எதிக்கட்சியினருக்கு கூறிக்ககொள்ள விரும்புகிறேன்.

தொடர்ந்தும் நாங்கள் உறுதியாக ஆட்சி செய்வோம.; இவர்கள் எங்களை வீழ்த்த முயற்சிக்கலாம் ஆனால்; மீண்டும் மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாட்டை ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்வோம். எமது அரசின் நல்லாட்சிச் செயற்பாடுகளை எவராலும் தடுக்க முடியாது.

ஒருங்கிணைந்த எதிர்கட்சியினர் தற்போது புதிதாக பொருளாதார ஆராச்சிப் பிரிவு ஒன்றை ஆரம்பித்து தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரத்தைப் எவ்வாறு உள்ளது என ஆராயப் போகிறார்களாம்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற்ற நிதி பொருளாதார மேசடிகள் பற்றி முதலில் ஆய்வு செய்யுங்கள். தொழிற்சாலைகளை ஆரம்பிக்க எவ்வளவு தரகுப் பணம் பெறப்பட்டது என முதலில் ஆராச்சி செய்யுங்கள்.

பொதுமக்களின் உணவுக்காக வீட்டுக்காக மருத்துவச் செலவுக்கான பணங்களை எடுத்து எவ்வாறு செலவிட்டிர்கள் என என ஆராயவேண்டியது உங்களது முதன்மையான பணி என கூறிக்கொள்ள விரும்புகிறேன்.

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும்போது நிவாரணம் வழங்கும் போது தரகுப்பணம் பெற்றார்கள் ஊழலில் ஈடுபட்டார்கள் பொதுமக்களின் திட்டங்களிலிருந்து எவற்றை சுருட்டிக்கொண்டேர்கள் என ஆராச்சி செய்து பாதிக்கப்பட்ட மக்களின் முன் சமர்ப்பியுங்கள் என அவர்களுக்கு சவால்விடுக்கின்றேன்' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -