மல்வானை பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கிறது...!





எஸ். அஷ்ரப்கான் -

தொடர்ச்சியாகப் பெய்து வரும் அடைமழை காரணமாக இலங்கையின் எல்லா பிரதேசங்களிலும் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

மல்வானை ரக்ஸபான பிரதேசத்தில் களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்தமையினால் பாரிய வெள்ளம் ஏற்பட்டுள்ளதுடன் பாரிய போக்குவரத்துத் தடையும் ஏற்பட்டுள்ளது. இதனால் கொழும்பு பிரதான நகரிலிருந்து கிராமப் புறங்களுக்கு செல்லும் பயணிகள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலைமையை நேரில் கண்டறிவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜய வர்த்தனவின் மல்வானை பிரதேச அரசியல் விவகாரங்களிற்கான இணைப்பா ளர் எம்.இர்பான் மற்றும் அமைச்சரின் கம்பஹா மாவட்ட முஸ்லிம் விவகாரங்களிற்கான இணைப்பாளர் எம்.தல் ஹாம் ஆகியோரின் விசேட அழைப்பின் பெயரில் அமைச்சரின்|பிரத்தியேகச் செயலாளர் குறித்த பிரதேசத்திற்கு வருகை தந்ததுடன் பாதிக்கப் பட்ட மக்களுக்கான நிவாரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் பிரதேச மக்களுடன் கலந்துரையாடினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -