" பெருகிய வெள்ளத்தில் நனைந்த உள்ளங்கள் "
============================================
திடீரென மாறிய கால நிலை
காட்சி தந்த கோலம். களனி தொட்டு மல்வானை வரை ,
திரும்பும் திசையெல்லாம்
"கண்"காணக் கூசுதே !
கடல் போல வெள்ளம் ...!
சொகுசு வண்டி வந்த பாதைகள் எல்லாம் நதிக்களமாய் மாறி
வள்ளம் ஏறி வாசல் தேடிய துயரம்....!
வந்த பாதை இதுவாக இருக்குமோ !
என வழி மறந்து வந்த உறவுகள்,
கண்ணுக்கெட்டிய தூரம்வரை
கடலாய் தெரிந்த நிலத்தை கண்டு
கதிகலங்கிய நின்ற சோகம்...!
நேற்றுவரை "படகு" மீனவனுக்கு
மட்டுமே என்று எண்ணியிருந்தோம்.
இன்று முதல் உணர்ந்தோம் மீதமுள்ளவர்களை மீட்கவும் என்று...!
ஊரெங்கும் உதவி தேடுகிறார்கள்
உத்தம நெஞ்சங்கள் ...
வாசல் படி முதல் வட்ஸாப் வாயிலும்
வழி அமைக்கிறார்கள் வந்து உதவ ....!
அடுக்குமாடி, ஆடம்பர வீடுகள் என ஆணவம் காட்டியவர்கள்யெல்லாம்
அமைதியாய் அமந்திருக்கிறார்கள்,
பள்ளி அறை தொட்டு பாடசாலை
வரை ...!
யுத்த தோட்டாக்கள் தூக்கிய கைகள் எல்லாம் உதிர்ந்த உறவுகளையும் , உயிர் கொடுத்த உத்தம தாய் குலத்தையும் தூக்கிச் செல்கையில் உள்ளம் குளிர்ந்து போகிறது படை திரண்ட பாசத்தை கண்டதும்.....!
மத வேதம் , குல வேதம் என்ற மமதையை மண் தோண்டி புதைத்து இந்த மழை வெள்ளம். மனித நேயம் கொண்ட பல உறவுகளையும் வென்றது...!
பள்ளிப் பாடப் புத்தகங்களை பார்த்து பார்த்து ஏங்கிய சின்னஞ் சிறுசுகளின்
கள்ளம் இல்ல பார்வை கண் முன்னே மின்னி ஒளிக்கிறதே....!
அலையாய் ஓய்ந்த இத்துயரம் துடைக்க
நாமும் உதவிடுவோம் நாயன் இறைவனையும் வேண்டிடுவோம்..
முஹம்மட் றிபாத்
- காத்தான்குடி -