கண்டி நுவரெலியா பிரதான பாதையில் மண் சரிவு காரணமாக சங்குவாரி தோட்ட பகுதியில் பாதை ஒரு வழியாக மாற்றம்
தற்போது மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக கண்டி நுவரெலியா பிரதான பாதையின் அருகே ஆங்காங்கே பல இடங்களில் சிறிய மற்றும் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டு;ள்ளன. இரட்டைபாதை சங்குவாரி தோட்ட பகுதியில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளதால் பாதை ஒரு வழி பாதையாக மாற்றபட்டுள்ளது.
வாகனங்கள் தங்குதடையின்றி பயனிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் பாதையில் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதினால் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை கவனமாக செலுத்துமாறு கேட்டுக் கொள்கின்றனர்.