பௌத்த பிக்குமாருக்கு அரசியல் பேசும் தகுதியில்லை - அமைச்சர் ராஜித அதிரடி

பௌத்த பிக்குமார் அரசியல் பேசும் உரிமையற்றவர்கள் என்று சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன பரபரப்பான கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.

1950ம் ஆண்டு மே மாதம் பிறந்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவின் 65 வது பிறந்த தினம் நேற்றாகும்.

இதனை முன்னிட்டு கொழும்பு, மருதானையில் வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் ராஜித சேனாரத்ன மேற்குறித்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் ராஜித சேனாரத்ன, தேர்தல் அரசியலில் வெற்றி பெறும் நோக்கிலக் நாட்டில் இனவாதம் வளர்த்துவிடப்பட்டுள்ளது. குறித்த மனப்பான்மையில் இருந்து நாம் அனைவரும் விடுபட வேண்டும்.

பௌத்த பிக்குகளுக்கு அரசியல் பேசும் தகுதியோ, யாரையும் கண்டபடி விமர்சிக்கும் உரிமையோ இல்லை. அதே நேரம் இனவாதம் பேசுவது பௌத்த துறவறத்துக்கே தகுதியற்ற விடயமாகும் என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.tw
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -