அல்லலுறும் சிரியாவும் மௌனம் காக்கும் உலகமும்...?

டந்த ஆறு வருடங்களுக்கு மேலாக சிரியாவில் நடந்து வரும் உள் நாட்டு போரை பெரும் பான்மையான ,முஸ்லிம்கள் தூனிசியா, எகிப்து, யெமன், லிபியா போன்ற நாட்டில் நடைபெற்ற ஆட்சி மாற்றத்துக்கான உள்நாட்டு போரை போல சிரியாவையும் அனுகுகின்றனர். ஆனால் சிரியாவின் நிலைமை உண்மையில் முற்றிலும் மாற்றமானது.

மேற்சொன்ன நாட்டில் நடைபெற்ற புரட்சிகள்,போராட்டங்கள் அனைத்தும் தன் நாட்டை ஆட்சி செய்துக்கொண்டு இருந்த கொடுங்கோல் ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் மேலும் நீதமான ஆட்சி வேண்டுமென்றும் கூடவே இஸ்லாமிய சட்டம் தான் வேண்டுமென்றும் போராடினர்கள். அதன் விளைவாக அந்தந்த நாடுகளில் ஏதோ அல்லாஹ்வின் உதவியினால் ஆட்சி மாறியது ஆனால் இஸ்லாமிய ஷரியத் நடைபெறவில்லை இது தான் நிதர்சனமான உண்மையுமாகும்.

ஆனால் சிரியாவில் நடக்கும் போரானது ஆரம்பத்தில் ஆட்சி மாற்றத்துக்கான போராக இருந்த போதிலும் தற்போதய சூழ் நிலையில் அது ஷீஆ சுன்னி என்ற கொள்கைக் எதிரான போராக இன்று வரை மேற் கொள்ளப் படுகின்றது அதற்கு முக்கிய காரணமே அந்த நாட்டு கொடுங் கோல் மன்னன் பசருல் அசாத்தின் ஷீஆ இராணுவமே ஆகும்.

தற்போதய சூழ் நிலையில் சிரியாவின் நிலையானது படு மோசமாக இருக்கின்றது அவர்கள் பயன் படுத்துகின்ற அணு ஆயுதங்களும் அணு வாயுக்களும் உலக வரலாற்றிலயே எந்த வொரு நாடுகளும் போர் காலங்கலிலயே பயன் படுத்தாத அத நவீன இரசாயன சக்தி வாய்ந்த இரசாயன பொருட்களாக இருக்கின்றது அங்கு நடக்கும் பிரச்சினைகளை கூட சரியான முறையில் வெளிக் கொண்டு வர முடியாத நிலையாகவே இருக்கின்றது ஏனெனில் அங்கு தற்போது ஊடக சுதந்திரம் முற்று முழுதாக பறி போய் விட்டது.

ஆகவே நாம் ஒன்றை நன்றாக புரிந்து கொள்ள வேண்டும் மற்ற நாடுகளில் ஏற்பட்ட புரட்சிப் போலவே அங்கும் புரட்சி வெடித்தது உண்மைதான் ஆனால் இங்கு நடப்பது ஆட்சி மாற்றத்துக்கான புரட்சி மட்டுமல்ல மாறாக இஸ்லாமிய ஷரியத்தை நடைமுறைப்படுத்தகூடிய ஒரு இஸ்லாமிய அரசை நிறுவுவதற்கும் இன்னும் அதன் மூலம் இஸ்லாத்தை பிற நாட்டு மக்களுக்கும் கொண்டு சென்று இந்த உலகம் முழுவதும் இருக்கின்ற மக்களை இஸ்லாத்தின் பக்கம் அழைகின்ற ஒரு இஸ்லாமிய கிலாஃபத்தை மையமாக வைத்தே அங்கு புரட்சி நடைபெறுகின்றதுஅதை புரட்சி என்று சொல்வதை விட அல்லாஹ்வின் கட்டளையை மேலோங்க செய்வதற்காக நடை பெறுகின்ற ஜிஹாத் ஆகும் என்று கூறுவதில் எவ்வீத ஆட்சேபனுமில்லை.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:-

ஈராக்கில் ஒரு படை , சிரியாவில் ஒரு படை மற்றும் யெனில் ஒரு படை இருக்கிறது என்றால் நீங்கள் உங்களை சிரியாவின் படையோடு (அஸ்-ஸாம்) இணைத்துகொள்ளுங்கள் என்றார்கள் ஏனெனில் அல்லாஹ்வின் மலக்குகள் பூமிக்கு வரும்போது அஸ்-ஸாம் பகுதியில் தங்களுடைய இறைக்கைகளை விரித்தவாறு இறங்குகின்றனர் இதுபோன்று நபி(ஸல்) அவர்களால் சிறப்பித்து கூறப்பட்ட பகுதிதான் சிரியாவாகும்

இதுபோன்று பல அறிவிப்புகள் சிரியாவைப் பற்றி வந்துள்ளது. உலகமே அவர்களை எதிர்த்தாலும் அஸ்-ஷாம் பகுதி மக்கள் ஈமானை இழக்கமட்டர்கள்.

இன்று உலகம் அவர்களை கைவிட்டுவிட்டது, அரபு நாடுகளும் கைவிட்டுவிட்டது, முஸ்லிம்களாகிய நாமும் அவர்களைப் பற்றி சிந்திப்பதில்லை உண்மையில் அல்லாஹ் அவர்களை அவனுடைய தீனுக்காக தேர்ந்தெடுத்துக்கொண்டான் ஆகவேதான் அவர்கள் சொந்த நாடுகளிலயே ஷஹீத் உடைய அந்தஸ்த்துக்காக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்.

உலகமே இன்று அவர்களை கைவிட்ட பொழுதும் அவர்களின் குரலாக இருக்கிறது ஹஸ்புனல்லாஹ் அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன் என்றும் அவனே எங்களுக்கு வெற்றியளிப்பான் என்றும் மாத்திரமே அவர்களின் மனதில் இருக்கின்றது.

ஆகவே சிரியாவில் நடைபெறுகின்ற போர் ஆனது அல்லாஹ்வின் தீனை மேலோங்க செய்வதற்கான போரைத்தவிர வேறில்லை. இன்ஷாஅல்லாஹ் அங்கு இஸ்லாம் வெற்றி பெற்று அல்லாஹ்வின் மார்க்கம் அங்கு நிலைநாட்டப் படும்போது முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒரே குடையின் கீழ் வரும் அன்று இஸ்லாம் உலகம் முழுவதும் பரவி அனைத்து மார்கங்களைவிடவும் மேலோங்கும் என்பதில் எல்லளவும் சந்தேகமில்லை இன்ஷா அல்லாஹ்.

வை.எம்.பைரூஸ்,
வாழைச்சேனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -