க.கிஷாந்தன்-
நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நாட்டை ஆளுபவர்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் ஆசி வேண்டியும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட தர்ம யாத்ரா தர்ம ஊர்வலம் 12.05.2016 அன்று அட்டன் நகரை வந்தடைந்தது.
இதன் போது அட்டன் தலைமையக பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் தயால் திகாவத்துரை தலைமையில் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதனை தொடர்ந்து அட்டன் நகரில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.பியதாச அவர்கள் கலந்து கொண்டு இவ் தர்ம ஊர்வலத்திற்கு வழிபாடுகளை செய்தார்.
நாட்டு மக்களுக்கும், உலக மக்ளுக்கும் நல்லாசி வேண்டி இடம்பெற்ற இத்தர்மம ஊர்வலம் கடந்த 07 ம் திகதி வாத்துவை சந்திராராம மிஹிந்துமா விகாரையிலிருந்து ஆரம்பமாகி பிரசித்தி பெற்ற பௌத்த விகாரைகளான சேறுவாவில, திரியாய இசோமாவத்தியபதெனிய, உட்பட பல பிரசித்தி பெற்ற பௌத்தளங்களுக்கு சென்று எதிர்வரும் 20 ம் திகதி இரத்தினபுரி சமன் தேவாலயத்தினை சென்றடைய உள்ளது.
இத் தர்ம ஊர்வலத்தில் புத்தபெருமானின் திருப்பாதம் மற்றும் தூபி ஆகியன வைக்கப்பட்டுள்ளன.
வாத்துவை சந்திராராம மிஹிந்துமா விகாரையின் விகாராதிபதி போபிட்டிய தம்மேஸ்வர அவர்களின் தலைமையில் இவ் ஊர்வலத்தில் பொலிஸ் நலன்புரி பிரிவின் உதவி பொலிஸ் அதிகாரி டி.பந்துல சந்திரிசிறி உட்பட பல பிக்குமார்கள் கலந்த கொண்டிருந்தனர்.