அமைச்சர் ஹக்கீம் தலைமையில் இலங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவு சங்க உறுப்பினர்கள் சந்திப்பு..!

ஷபீக் ஹூஸைன்-
லங்கை – துருக்கி பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இன்று பத்தரமுல்லை, வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில், இலங்கை வந்துள்ள துருக்கி நாட்டின் வர்த்தக மன்றத்தின் தூதுக்குழவினரை சந்தித்து உரையாடினர்.

இலங்கை வர்த்தக மன்றத்தினருடனான உடன்படிக்கையை நிறைவு செய்யும் நோக்கத்துடன் அந்நாட்டுத் தூதுக்குழவினர் இங்கு விஜயம் செய்துள்ளனர்.

துருக்கி நாட்டுத் தூதுவர் துன்காசுஹதார் தம் நாட்டு தூதுக்குழவினருடன் வருகை தந்திருந்தார்.

அமைச்சர் ஹக்கீம் தூதுக்குழவினருக்கும், பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பகற்போசன விருந்துபசாரம் அளித்து கௌரவித்ததோடு, அவர்கள் மத்தியில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -