சாய்ந்தமருதில் பகற்கொள்ளை :அரச உத்தியோகத்தர்கள் பீதி - எங்கே கல்முனை பொலிஸ்?

ஹாசிப் யாஸீன்-
ல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாய்ந்தமருது பிரதேச அரச உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டில் இன்று காலை பெறுமதியான தங்க நகைகளும் ரொக்கப் பணமும் கொள்ளையிடப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதானது,

சாய்ந்தமருது பிரதான வீதியிலுள்ள தபாலகத்தின் அருகிலுள்ள அரச உத்தியோகத்தர்; ஒருவரின் வீட்டின் கதவுகளை உடைத்து கொள்ளையர்கள் பெறுமதியான தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தினையும் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

கொள்ளையிடப்பட்ட வீட்டின் உரிமையாளர் வெளிக்கள அரச உத்தியோகத்தர்; அவரது மனைவி ஆசிரியையாகும்.

குறித்த அரச உத்தியோகத்தர் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வழமை போன்று இன்று காரியாலயத்திற்கு செல்வதற்காக வீட்டை விட்டு காலை 8.25 மணிக்கு வெளியேறியுள்ளனர்.

இதனை அவதானித்திருந்த கொள்ளையர்கள் வீட்டின் பின்புறமாக சென்று வீட்டின் முன்புற கதவினை மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு உடைத்து உட்சென்று தங்க நகைகளையும் ரொக்கப் பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளனர்.

குறித்த அரச உத்தியோகத்தர் காலை 11 மணியளவில் வீட்டுக்கு சென்றவேளை வீடு உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டதை அவதானித்துள்ளார்.

இதனை அடுத்து குறித்த அரச உத்தியோகத்தர் கல்முனை பொலிஸ் நிலையத்தில் தனது வீட்டை உடைத்து கொள்ளையர்கள் 6 லட்சத்து 30 ஆயிரம் பெறுமதியான தங்க நகைகளையும் 14 ஆயிரம் ரொக்கப் பணத்தினையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாக முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இச்சம்பவம் குறித்து கல்முனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஹேமந்த, கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி அத்துலத் முத்தலி, பெரும் குற்றப்பிரிவு பொலிஸ் பரிசோதகர் நிமல் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சாய்ந்தமருது பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற இச்கொள்ளை சம்பவத்தினால் கணவன்,மனைவி ஆகிய இருவரும் அரச உத்தியோகத்தர்;களாக கடமையாற்றுவர்கள் அச்சமடைந்துள்ளனர். ஏனெனில் தாங்களும் கடமையின் நிமித்தம் காரியாலயம் சென்றவுடன் இவ்வாறான கொள்ளைச் சம்பவங்கள் தங்களது வீடுகளிலும் இடம்பெறலாம் என்று அஞ்சுகின்றனர்.

எனவே இச்கொள்ளைச் சம்பவம் குறித்து கல்முனை பொலிஸார் விரைவாக செயற்படுவார்களா? என சாய்ந்தமருது பிரதேச மக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -