கலைக்கு (கலைமகளுக்கு) ஒரு வாழ்த்து...
கற்றவருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு
கலைமகளுக்கு காணும் இடமெல்லாம் சிறப்பு
வெல்பவரக்கு இல்லை ஒருபோதும் விருப்பு வெறுப்பு
விளங்காத சிலருக்கு சலிப்பு
கல்லும் முள்ளும் நிறைந்தது பாதை
காட்சிப்பிழை நிறைந்தது கலைப்பயணம்
தோற்றுபவை யாவும் நிரந்தரமல்ல
தோற்றதாக இவர் வரலாறு இல்லை
முப்பதாண்டு கலையோடு
கலையோ இசைந்து கலைமகள்.. இவரோடு
தூற்றினும் வன்சொல் விழுகினும்
மறையுது இவர் புன்சிரிப்போடு
தேடாத உறவுகள் தேடிவரும்
நாடிய பகையும் நலிந்து போகும்
கூட இருந்தால் .குன்றுமணிதான்
குப்பையாய் எவர் பார்க்கினும் பட்டைதீட்டிய வைரம்தான்
என்னையும் அணைத்த தாயானார்
எனக்குள் உறவாகி தான் நின்றார்
நிலையுணர்ந்த தாயானார்
நின்வாழ்வு சிறக்கவே வாழ்த்திப்பாடுகிறேன் நானுமே...!
வாழ்க பல்லாண்டு.வளர்க நூறாண்டு
தொடர கலையாண்டு
தொடர்வேன் நானும்.கலைக்காக.
தமிழோடு தமிழுக்காக தமிழ்மகள்.
-கவி கவிச்சுடர் சிவரமணி-
எஸ்.என்.எஸ்.றிஸ்லி.