பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத்தளத்தினூடாகவும் விண்ணப்பிக்க வேண்டுகோள்...!

அப்துல் கபூர் ஆதம்-
லங்கை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர் பேராசிரியர் மொகான் டி சில்வா அடுத்த வருட பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதியான மாணவர்கள் தங்களது விண்ணப்பப் படிவங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இணையத்தளமான றறற.ரபஉ.யஉ.டம யினை பிரவேசிப்பதன் மூலம் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று சரியாக பூரணப்படுத்தி இணையத்தளத்தினூடாகவே அனுப்ப முடியும் என தெரிவித்துள்ளார்.

இணையத்தளத்தினூடாக விண்ணப்பப் படிவத்தினைப் பூரணப்படுத்தி அனுப்புவது மிகவும் வினைத்திறனானதும் வசதியானதுமாகும். இது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும் மாணவர்களுக்கும் இலகுவான முறையாகும்.

மாணவர்கள் விண்ணப்பப் படிவத்தினை இணையத்தளத்தினூடாக அனுப்பிய உடனே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அதனை பெற்றுக் கொண்டதனை உறுதிப்படுத்தி குறிப்பிட்ட மாணவரினுடைய கையடக்க தொலைபேசியிற்கு ஒரு குறுந்தகவல் அனுப்பப்படும் அதேவேளை மின்னஞ்சல் முகவரியிற்கும் உறுதிப்படுத்திய செய்தி ஒன்றும் அனுப்பி வைக்கப்படும்.

எனவே பல்கலைக்கழக அனுமதிக்காக இணையத் தளத்தினூடாக விண்ணப்பிக்கவுள்ள மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கு முதல் தங்களுக்கு என ஒரு தொலைபேசி இலக்கத்தினையும் மின்னஞ்சல் முகவரியினையும் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

தபால் மூலம் விண்ணப்பப் பத்திரங்களினை அனுப்புவதற்கு எவ்விதமான தடைகளும் இல்லை அதேவேளை தபால் மூலம் விண்ணப்பிப்பதிலும்; பார்க்க இணையத் தளத்தினூடாக விண்ணப்பிப்பதற்கு மாணவர்கள் ஊக்குவிக்கப்படுகிறார்கள் எனவும் தெரிவித்தார். தபால் மூலமான விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் அதேவேளை இணையத்தளத்தினூடாக விண்ணப்பிப்பதயே ஆணைக்குழு விரும்புவதாகவும் தெரிவித்தார்.

மாணவர்கள் நாடாளவிய ரீதியில் அமையப்பெற்றுள்ள நெசனலஇ தகவல் தொழில்நுட்ப மற்றும் திறந்த பல்கலைக்கழக நிலையங்களினுடாக இலவசமாக விண்ணப்பங்களை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிக்கு அனுப்பி வைக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -