ஏ.எல்.எம்.சினாஸ்-
கல்முனை மாநகர சபை பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்க முன்வர வேண்டும். என சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக்குழுத் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சாய்ந்தமருது பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் சாய்ந்தமருது பிரதேசெயலகத்தின் கேட்போர் கூடத்தில் (13.05.2016)அபிவிருத்திக் குழுத் தலைவரும் பிரதி அமைச்சருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது. இங்கு மாநகர சபை திண்மக்கழிவு அகற்றுவது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்ட போது உரையாற்றுகையிலேயே பிரதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அமைச்சர் அங்கு மேலும் உரையாற்றுகையில்;
பொதுமக்கள் திருப்திப்படும் சேவையை வழங்க கல்முனை மாநகர சபை முன்வர வேண்டும் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மாநகர சபை அபிவிருத்திக் குழுவின் தலைவர் என்றவகையில் என்னோடு கலந்தாலோசிப்பது கிடையாது. மக்களுக்கு திருப்திகரமான சேவை கிடைக்கும் போது மக்கள் தானாக முன் வந்து வரிப்பணத்தை செலுத்துவார்கள்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் கீழுள்ள கிரம சேவை பிரிவுகளின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி செய்யப்படும். பிரதேச வைத்தியசாலை சகல வசதிகளும் கொண்ட வைத்தியசாலையாக விரைவில் தரமுயர்த்தப்படும். கல்விச் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பொதுச் சுகாதாரம், குடிநீர், மின்சாரம், வீதி அபிவிருத்தி, சமூகப் பிரச்சினைகள் என இங்கு தெரிவிக்கப்படும் அனைத்து பிரச்சினைகளுக்கும் விரைவில் தீர்வு பெற்றுத்தருவதற்கு என்னாலான முயற்ச்சிகளை மேற்கொள்வேன் எனவும் தெரிவித்தார்.
கிராமமட்ட குழுக்கள், சமூக அமைப்புக்களின் சார்பில் இங்கு கலந்து கொண்ட மக்கள் பிரதிநிதிகள் இன்று சாய்ந்தமருது பிரதேச பொதுமக்களால் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளை முன்வைத்தனர். நிகழ்வில் கலந்து கொண்ட திணைக்களத் தலைவர்கள் இதற்கு விளக்கமளித்தார்கள். இறுதியில் குறித்த பிரச்சினைகளுக்கு எதர்காலத்தில் முன்னெடுப்பதற்கான தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதில் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், மாநகர சபை ஆணையாளர் ஜெ.லியாக்கத் அலி, கல்முனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.டப்ளியு.ஏ.ஹப்பார், மாநகர சபையின் பிரதி மேயர், மக்கள் பிரதிநிதிகள், திணைக்களத் தலைவர் என பலரும் கலந்து கொண்டனர்.