மக்கள் அரங்கச் செயற்றிட்டத்திற்கு விண்ணப்பங்கோரல்.

எப்.முபாரக்-

இலங்கை மக்கள் அரங்க நாடகச் செயற்திட்டத்தின் நான்காவது கட்டம் வடக்கில் ஆரம்பமாக உள்ள நிலையில் தகுதிவாய்ந்த, ஆர்வமுள்ள இளம் நாடகக் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பம் கோரப்படுகின்றது.

இச் செயற்திட்டம் நுண்கலை மற்றும் அழகியல் பல்கலைக்கழகம், மாகாணக் கல்வி அமைச்சுகள் என்பவற்றுடன் இணைந்து இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையத்தின் மூலம் அமுல்படுத்தப்பட உள்ளது.

தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களைச் சேர்ந்த, நாடகம் மற்றும் மக்கள் அரங்கம், வீதி நாடக ஆற்றுகை, மேடை நடிப்பு ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஆண்- பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

நிபுனத்துவ பயிற்றுவிப்பாளர்களினால் பயிற்சி வழங்கப்பட்ட பின்னர் மொத்தம் 30 மக்கள் அரங்க நாடகங்கள் தயாரிக்கப்படும். இவை யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் வவுனியா ஆகிய பிராந்திய பாடசாலைகளில் அரங்கேற்றம் செய்யப்படும்.

பயிற்சி இலவசமாக இடம்பெற உள்ளதோடு பயிற்சி முடிவில் ஆற்றுகையூம் இடம்பெறும். இதன்போது உணவு, தங்குமிட வசதிகளும் செய்து கொடுக்கப்படும். பயிற்சிக் காலத்தில் போக்குவரத்துக் கொடுப்பனவு ம் கள ஆற்றுகையின் போது நாளாந்தக் கொடுப்பனவும் கலைஞர்களுக்கு வழங்கப்படும்.

ஏற்கனவே நாடகக் கழகங்கள், ஆற்றுகைச் சங்கங்கள் என்பனவற்றுல் அங்கத்துவம் வகிக்கும் கலைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

மொத்தமாக 36 கலைஞர்கள் மாத்திரமே இலங்கை மக்கள் அரங்கச் செயற்றிட்டத்திற்காக தெரிவு செய்யப்படுவர்.

செயற்திட்ட முடிவில் சர்வதேச மக்கள் அரங்க ஆற்றுகை மாநாடு ஒன்றை இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம் நடத்தவுள்ளதால் தெரிவு செய்யப்படும் கலைஞர்களுக்கு அதில் பங்குபற்றும் வாய்ப்பும் வழங்கப்படும்.

விண்ணப்ப முடிவு : 2016 மே மாதம் 30 ஆம் திகதி ஆகும் .

விண்ணப்பிக்க வேண்டிய மின்னஞ்சல் முகவரிINFO@LDJF.ORG

தபால் மூலம் விண்ணப்பிப்போர் :
மக்கள் அரங்கச் செயற்திட்டம்
இலங்கை அபிவிருத்திக்கான ஊடக நிலையம்
இலக்கம் 429,
நாவல வீதி
ராஜகிரிய என்னும் முகவரிக்கு விண்ணப்பங்களை அனுப்பலாம்
தொலைபேசி : 0776653694
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -