சப்ரின்-
அக்காரைப்பற்றில் பலவருடங்களின் பின் மின்னொளியில் இடம்பெற்ற கால்பந்து சுற்றுப்போட்டியின் வெற்றிக்கினத்தை உதயசூரியன் அணி தட்டிக்கொண்டது
நேற்று இடம்பெற்ற இறுதி ஆட்டத்தில் அல்லாஜ் அணியை எதிர்த்து உதயசூரியன் அணி மோதியது ஆட்டமுடிவின்போது இரு அணிகளும் தலா ஒரு கோளை போட்டமையினால் பனால்டி உதைகள் வழங்க்கப்பட்டது அதில் 4-1 என்ற அடிப்படையில் உதயசூரியன் அணி வெற்றிவாகை சூடியது.
இந்நிகழ்வில் சுகாதரா பிரதி அமைச்சர் பைசல் காசீம், AL தவம், SM சபீஸ் உட்பட பலபிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
SM சபீஸ் கிண்ணங்களை வழங்குவதற்கு அழைக்கப்பட்ட போது அங்கு குழுமியிருந்த இளைஜர்கள் 5 நிமிடங்களுக்கு மேல் கைதட்டி வரவேற்றதனை காணக்கூடியதாக இருந்தது, இது சபீஸ் இளைஜர்கள் மத்தியில் அதிக செல்வாக்கினை பெற்றுள்ளார் என்பதனை எடுத்துக்காட்டியது.
அங்கு கருத்துக்கூறிய அனிபா என்பவர் இன்று பிரதம அதிதியாக வந்துள்ளவர்கள் 3 தடவைகளுக்கு மேல் இந்த மைதானத்துக்கு வந்துள்ளமையினால் அடுத்ததரம் பிரதம அதிதியாக வரும்போது வாக்குறுதி அளித்தமாதிரி இம்மைதானத்தின் குறைகளை நிவர்த்தி செய்துவிட்டு வருவீர்கள் என நான் நம்புகிறேன் என தெரிவித்தார் .