பாதிக்கப்பட்ட மக்கள், தொடர்பு கொள்ள அவசர இலக்கங்கள்...!

வசர அனர்த்த நிலமைகள் தொடர்பில் தகவல்களை வழங்கவும் உடனடி நிவாரணங்களை பெற்றுக் கொள்ளவும் நடவடிக்கை பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்படும் திடீர் அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு முப்படையினரின் ஊடாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை உரிய முறையில் செயற்படுத்துவதற்காக பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகத்தில் (OCDS) அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு (Ops Room)ஒன்று பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கு அமைய (2016.05.17) இன்று மாலை தொடக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவசர அனர்த்த நிலமைகள் தொடர்பில் தகவல்களை கீழ் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்கு நேரடியாகவோ அல்லது தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவோ தொடர்பு கொண்டு அறியத்தருமாறு பாதுகாப்பு அமைச்சு பொது மக்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக பாதுகாப்பு அமைச்சின் ஊடக மையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய பாதுகாப்பு படைகளின் பிரதம அதிகாரியின் அலுவலகம் (அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை பிரிவு) 
கட்டடிட இலக்கம் 05, 
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபம் (BMICH) பௌத்தாலோக்க மாவத்தை, 
கொழும்பு – 07. முகவரியுடனோ

அல்லது 011 2 674502, 011 2 674503, 011 3 075792, 011 3 070275, 011 3 818612 ஆகிய தொலைபேசி இலக்க்ங்களுடன் தொடர்பு கொண்டு அறியத்தருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -