எதிர்வரும் றமழானைத் தொடர்ந்து சாய்ந்தமருது நகரசபையை வலியுறுத்தி, சத்தியாக்கிரகம் இருப்போம்...!

எம்.வை.அமீர்-
டந்த தேர்தலின்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரால், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எழுதிக்கொடுக்கப்பட்டு, வாசிக்கப்பட்டு உத்தரவாதமளிக்கப்பட்ட, சாய்ந்தமருது மக்களுக்கான நகரசபையை சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக வழங்க முன்வரவேண்டும். 

எதிர்வரும் றமழானுக்கிடையில் குறித்த நகரசபையை வழங்காது விடப்படுமானால், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது மத்திய குழு தலைமையில், சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் முன்பாக, பாரிய சத்தியாக்கிரக போராட்டத்தை நடத்துவோம். 

என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தலைவரும், முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவருமான, கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் அமைந்துள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட தலைமையகத்தில்,2016-05-02 ஆம் திகதியன்று ஏ.சீ.எம்.சீ.யின் சாய்ந்தமருது மத்தியகுழுவின் ஊடாக, விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, அவ் அமைப்பின் அமைப்பாளர் ஏ.எல்.எம்.அன்வர் தலைமையில் இடம்பெற்றது. 

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய கலாநிதி ஜெமீல், சாய்ந்தமருது மக்கள் எதிர்நோக்கும் உள்ளுராட்சிசபையுடன் தொடர்புடைய பிரச்சனைகளை கையாழ்வதற்கு, அவர்களுக்காக தனியானதொரு சபை இல்லாது பலவருடங்களாக சம்மந்தப்பட்டவர்களை வலியுறுத்தி வருகின்றனர். 

விசேடமாக காலம்காலமாக அவர்கள் வாக்களித்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை கோரி வருகின்றனர். ஆனால் அக்கட்சி சில தனிப்பட்டவர்களின் அஜண்டாவில் இயங்கிக்கொண்டு இம்மக்களின் நியாயமான கோரிக்கையை பெற்றுக்கொடுக்காது சாய்ந்தமருது மக்களை ஏமாற்றி வருகின்றது.

கடந்த காலத்தில் இம்மக்களின் நியாயமான கோரிக்கையை உணர்ந்த நான், மாகாணசபையில் தமிழ் உறுப்பினர்களின் ஆதரவுடன் பிரேரணை ஒன்றை நிறைவேற்றினேன். ஆனால் சபையால் அங்கீகரிக்கப்பட்ட கோரிக்கையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தடுத்து வைத்துள்ளது. 

தொடராக தேர்தல் காலங்களில் மட்டும் நமது பகுதிகளுக்கு வருகைதந்து வட்டைகடைகள் போல் அலுவலகங்களை திறந்து போலி வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றிவரும் இவர்களை மக்கள் இனம்காண வேண்டும். தற்போதைய முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் 16 வருடங்களாக இக்கட்சியில் இருக்கிறார், இவரின் ஊடாக நமது அப்பாவிமக்கள் பெற்றது என்ன? ஒரு சிலர் சுகபோகங்களை அனுபவிப்பதற்கு இன்னும் நாம் அவர்களுக்கு துணைபோகவேண்டுமா? நன்றாக யோசியுங்கள் என்றும் கேட்டுக்கொண்டார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் உளச்சுத்தியுடன் செயற்படும் ஒரு சிறந்த தலைவர். அவரது கரத்தை பலப்படுத்துவதன் ஊடாக நாங்கள் நமது தேவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும். 

நமது எதிர்கால சந்ததிக்கு நாம் நல்லவற்றையே செய்துவிட்டு செல்ல வேண்டும் அமைச்சர் றிசாத் பதியூதீன் அவர்கள் நமது பிராந்தியத்தின் அபிவிருத்திக்கும் இளைஞர் யுவதிகளின் வேலையில்லா பிரச்சினையை தீர்ப்பதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை தயார் செய்து வருகிறார் அதேபோன்று வாழ்வாதார உதவிகளை செய்வதற்கும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

இங்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சாய்ந்தமருது பிரச்சார செயலாளர் எம்.எம்.உதுமாலெப்பை மற்றும் கல்விக்குளுத்தலைவர் அப்துல் றஹீம் ஆசிரியர் போன்றோர் உரையாற்றினர் நிகழ்வில் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -