அஷ்ரப் ஏ சமத்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்களது 9 வருட ஆட்சிக் காலத்தில் 4 மடங்குகளில் எடுத்த மொத்த கடன்களை இந்த நல்லாட்சி அரசு தவனைப்பணத்தினையும், வட்டியையும் இந்த வருடம் செலுத்த வேண்டியதாலேயே தற்போதைய அரசினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற இந்த வற்வரி அறவிடப்படுகின்றது.
இவ் வறிமுறையை ஜ.தே.கட்சி அரசு அல்ல ஆட்சியில் உள்ள சகல அமைச்சா்களும் இணைந்து அமைச்சரவையில் அனுமதித்தே இதனை அமுல்படுத்தியுள்ளோம். என பாராளுமன்ற உறுப்பிணா் ஹா்சன ராஜகருநாயக்க தெரிவித்தாா்.
இன்று(12) ஜ.தே.கட்சியின் தலைமையகமான சிறிக்கொத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளா் மாநாட்டின்போதே பராளுமன்ற உறுப்பிணா் ஹா்சன ராஜகருநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தாா்.
அவா் அங்கு மேலும் தகவல் தருகையில் -
இலங்கை சுதந்திர மடைந்து கடந்த கால நாட்டின் தலைவா்கள் டி.எஸ்.நாயக்கா தொட்டு சந்திரிக்காவரை ஆட்சியாளாகளை விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க அவா்களது ஆட்சிக் காலத்திலேயே இலங்கையின் ஒரு குடிமகனை 4 இலட்சத்தி 25 ஆயிரம் ருபா வரை அடகு வைத்து 8500 பில்லியன் ருபா கடன் பெறப்பட்டுள்ளது.
இக்கடனுக்கு வட்டி 509 பில்லியனும் மற்றும் 1200 பில்லியன் தவனைப் பணத்தினையும் இந்த நல்லாட்சி அரசினால் செலுத்த வேண்டியுள்ளது. அதன் நிமித்தமே இந்த வெற் வரி முறை நடைமுறைக்கு வந்தது.
இந்த அரசாங்கம் 2015ல் 1355 பில்லியன் ருபாவையே கடனாக பெற்றது ஆனால் மஹிந்த 2014- 20190 பில்லியன் ருபாவை உள்ளுாாிலும் வெளிநாடு நிறுவனங்களிடம் கடகள் பெற்றுள்ளாா்.
அன்று இந்த ஆட்சியில் இருந்த விமல் வீரவன்ச அவா்கள் அப்போதைய நிதியமைச்சின் செயலாளரை பொருளாதரா நாசகாரன் என்று சொல்லி இந்தக் கடன்களை பெறும்போது ஆமதித்து விட்டு இன்று வெற் வரிக்காக உயா் நீதிமன்றம் சொல்கிறாா்.
பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான் இங்கு கருத்து தெரிவிக்கையில் -
பிரதமா் ரணில் விக்கிரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு ஒரு வாகணத்தினை கொள்வனவு செய்வதற்காக 600 மில்லியன் ருபாவுக்கு பெருவதையிட்ட மாபெரும் முதலைக் கண்னீா் வடிக்கின்றனா். பிரதமா் ரணில் பிரதமா் பதவியை பெறும்போது அங்கு அவருக்கென வாகனம் இருக்க வில்லை.
அவா் தற்பொழுது பாவிக்கும் வாகணம் ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்து பெறப்பட்டவையாகும். அதில சோகம் நிகழ்வுக்காக கொண்டு வரப்பட்ட வாகணம் 2யே அவா் பாவிக்கின்றனாா். அவா் பெறுகின்ற வாகனம் 128 மில்லியன் மட்டுமே ஏனைய மிகுதி 400 க்கும் மேற்பட்ட மில்லியனும் மீண்டும் சுங்க தீா்வைக்கு மீண்டும் நிதியமைச்சுக்கே வந்து சேருகின்றன.
ஆனால் மகிந்த ராஜபக்ச ரேண்ஜா் 2 வென்ஸ் 2, பி.எம். டபிள்யு, 2 பாதுகாப்பு வாகனம் 2 ஒரு பஸ்சையும் கொண்டு சென்றுள்ளா இதைப்பற்றி ஏன் ஜே.வி.பி பேசவில்லை என அவா்களிடம் கேட் க விரும்புவுவதாக தெரிவித்தாா.
முன்னாள் அமைச்சா் பசில் ராஜபக்ச இன்று கைது செய்யப்பட்டதன் காரணம் என்ன ? அவா் மாத்தறையில் பிரவுன்ஹில்ஸ் காணியை 50 இலட்சம் ருபாவை காணியை முஜித்த ஜயக்கொடியிடம் நிதி பெற்றுள்ளாா். அவா் செய்த முறைப்பாட்டுக்கே பசில் ராஜபக்ச இன்று கைது செய்யப்பட்டாா்.
அதே போன்று தாஜூத்தீன் கொலையில் அடுத்த சில தினங்களுக்குள் சிலா் கைதாவாா்கள். என பாராளுமன்ற உறுப்பிணா் முஜிபு ரஹ்மான அங்கு கருத்து தெரிவித்தாா்.