கிழக்கு மாகாண சபையின் விசேட சபை அமர்வு இன்று (04.05.2016) காலை 10 மணியளவில் சபை தலைவர் சந்திரதாச கலப்பதி தலைமையில் ஆரம்பமானது. இந்த சபை அமர்வில் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்னாண்டோ அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இச் சபை அமர்வின் பின்னர் கிழக்கு மாகாண சபை முன்றலில் மாகாண சபை உறுப்பினர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டனர் .
இணைந்த வட, கிழக்கு மாகாண சபை பிரிக்கப்பட்டு கிழக்கு மாகாண சபையில் கடந்த எட்டு ஆண்டு காலப்பகுதிக்குள் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களின் புகைப்படங்கள் இன்று புதன்கிழமை அம்மாகாண சபையில் காட்சிப்படுத்தப்பட்டன.
இதன்போது 2008.05.10 அன்று முதல் 2012.06.27 வரையான ஆட்சிக்காலப் பகுதியில் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகித்தவர்களின் புகைப்படங்களை கிழக்கு மாகாண சபைத் தவிசாளர் சந்திரதாச கலப்பதி திரைநீக்கம் செய்து வைத்தார்.
2012.09.17 முதல் இன்றுவரை ஆட்சியிலிருக்கும் உறுப்பினர்களின் புகைப்படங்களை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்; நஸீர் அஹமட் மற்றும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோர் திரைநீக்கம் செய்து வைத்தனர்.