அதிகரிக்கப்பட்டுள்ள பெறுமதி சேர் வரி (வெட் வரி) அறவீட்டுக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச உயர் நீதிமன்றத்தில், அடிப்படை உரிமை மனுத் தாக்கல் செய்துள்ளார்.
குறித்த மனுவின் பதிலளிப்பவர்களாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
பெறுமதி சேர் வரி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி தொடர்பான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளாது, குறித்த வரிகளின் வீதம் அரசாங்கத்தால் மாற்றப்பட்டுள்ளமை சட்டவிரோதமானது என, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.