இடைவிலகும் மாணவர்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மீண்டும் பாடசாலைகளில் இணைக்க நடவடிக்கை..!

ஏறாவூர் நிருபர் ஏ.எம்.றிகாஸ்-
பாடசாலையை விட்டு இடைவிலகும் மாணவர்களை பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தேடிக்கண்டுபிடித்து மீண்டும் பாடசாலைகளில் இணைக்கும் வேலைத்திட்டமொன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் 10.05.2016 செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின் பிரகாரம் சுமார் 180 க்கு மேற்பட்ட மாணவர்கள் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயப்பிரிவில் இடைவிலகியமை கண்டறியப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஏறாவூர் நகர் பிரதேச செயலகம் மற்றும் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயம் ஆகிய நிறுவனங்களினால்

ஏறாவூர் - முஹாஜிரீன் கிராமத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கையின்போது கண்டுபிடிக்கப்பட்ட மாணவர்களில் ஒரு தொகுதியினர்; அல்-அமான் வித்தியாலயம் மற்றும் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் மீள்இணைக்கப்பட்டனர். 

மட்டக்களப்பு மத்தி கல்வி வலய முறைசாராக்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏஎல்எம் ஷரீப், உதவிப் பிரதேச செயலாளர் ஏசிஎப் றமீஸா, கிராம சேவகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் இந்த பணியில் இணைந்திருந்தனர். 

குடும்ப வறுமை மற்றும் பெற்றாரின் கவலையீனம் உள்ளிட்ட இதர காரணங்களினால் இச்சிறுவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளமை தெரியவந்துள்ளது. 

இதனால் இம்மாணவர்களுக்கு பாடசாலைச் சீருடை,கற்றல் உபகரணங்கள் மற்றும் போஷாக்குணவு என்பவற்றை இலவசமாக வழங்கி கற்றல் நடவடிக்கையினை ஊக்குவிக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -