புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்து விட்டு, அதற்கான கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவை தொடர்புகொண்ட இம்போட் மிரர் செய்திப் பிரிவு குறித்த செய்தி தொடர்பில் உண்மைத்தன்மையைக் கேட்டறிந்தது.
இதன்போது அப்படியான எந்தவித இராஜினாமா கடிதங்களும் ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை எனவும். குறித்த செய்தி வெறும் வதந்தி எனவும் இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு இம்போட் மிரர் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தனர்.
தற்போது இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மலேசியாவில் இருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.