மகனே.......!
நீ பிறந்த அன்று வீட்டின் கொல்லைப் புரத்தில் ஓர் தென்னையை நட்டி வைத்தேன்
நாங்கள் ஊற்றிய தண்ணீரில் தென்னை வளர்ந்தது
நாங்கள் சிந்திய கண்ணீரில் நீ வளர்ந்தாய்
எங்கோ இருந்து ஈட்டக் கூடிய பொருள் உனக்கு சுகத்தை தருகிறது
அருகிலயே இருக்கும் தென்னை எங்களுக்கு சுவை நீரும் சுக நிழலும் தருகிறது
பரவாயில்லை மகனே.....!
என்றாவது ஓர் நாள் நீ வருவாய் வருவாய் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏங்கிப் போனேன் இன்று எங்கள் உடல் முழுவதும் ஈ மொய்த்த செய்தி வந்திருக்கும்
அப்போதும் நீ ஈ மெயிலில்தான் மூழ்கிப் போயிருக்கிறாய்
எங்களுடைய இறுதி கூட்டத்தில் நீ கலந்து கொள்ளாமல் போனாலும்
நீ என்று நாங்கள் நினைத்து வளர்த்த தென்னை எங்களை ஓழையாக மாற்றி ஊர் எல்லை வரை கொண்டு சேர்க்கும்
அழாதே........
இப்படிக்கு அம்மா
ஆங்கிலத்திருந்து மொழி பெயர்க்கப்பட்ட கவிதை.
-mohamed fairoos-