இஸ்லாத்தை தழுவிய குடும்பங்களுக்கு உதவுங்கள்...!

சலீம் றமீஸ்-

ம்பாறை மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற தூய இஸ்லாத்தை தழுவிக் கொண்ட குடும்பங்கள் எதிர்வரும் நோன்பு மாதத்தில் ஆரோக்கியமான அமல்களுடன் நோன்பு நோற்கவும், நோன்பு திறப்பதற்கான உணவுப் பொதிகள் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றினை அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியம் (www.ACMYC.com) அமுல்படுத்தவுள்ளதாக அதன் தலைவர் என்.எம்.நஜாத் தெரிவித்தார்.

இத்திட்டமானது முதற்கட்டமாக அம்பாரை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாகவும், இத்திட்டம் சிறப்பாக வெற்றியளிப்பதற்கும் தனவந்தர்களிடமிருந்து உதவிகளை எதிர்பார்ப்பதாகவும் குறிப்பி்ட்டார்.

மேலும் அவர் கூறுகையில்;

இவ்வருடத்தின்(2016) ஆரம்பத்தில் பல தரப்பினருடைய நிதி உதவியுடன் மூவினத்தையும் சேர்ந்த வறிய மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கினோம்.  அல்ஹம்துலில்லாஹ்!

எமது அமைப்பின் அடுத்த வேலைத்திட்டம்தான் புதிதாக இஸ்லாத்திற்கு வந்த எம் உறவுகளும் இவ்(2016)றமழான் மாதத்தில் நோன்பு நோற்கநோன்பு திறக்க எங்களினால் முடிந்த உதவியையாவது செய்ய முன்வந்துள்ளோம்.

இஸ்லாத்தை ஏற்ற அவ் சகோதர,சகோதரிகளை (மௌலா இஸ்லாம் ) என்று கூறக் கூடியவர்கள் எம் சமூகத்தில் அதிகம் உள்ளனர். ஆனால் அவ் உறவுகளுக்கு உதவும் நபர்கள் குறைந்து கொண்டே செல்கின்றனர்.

இஸ்லாத்தை ஏற்ற அந்த உறவுகளின் வாழ்க்கை வசதிகள் பற்றி அக்கறை காட்டாமல்  எம்மில் பலர் அவர்களை புறக்கணித்துக் விடுகின்றனர்.

இன்னும் எம்மில் சிலர் தூய இஸ்லாத்தின் பக்கம் அவர்களை வழிகாட்டி விட்டு புதிதாக இஸ்லாத்தை ஏற்ற அந்த சகோதரசகோதரிகளின் அன்றாட வாழ்க்கை வசதிகள் பற்றிஅவர்கள் பொருளாதாரம் ஈட்டும் முறை பற்றி எந்த அக்கறையும் செலுத்தாமல் இடையில் விட்டு விடுகின்றனர்.

பல தியாகங்களுக்கு மத்தியில் தான் பிறந்து வளர்ந்த அன்பான தன் குடும்பத்தை துறந்து, தன் இருப்பிடத்தை இழந்துதான் செய்து வந்த தொழிலை விட்டுசிலர் தன் பாசத்திற்குரிய பிள்ளைகளை விட்டு விட்டு  தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட பல உறவுகள் இன்று சரியான உதவிகள் இல்லாமல் மேலும் பொருளாதார ரீதியில்  தமது அன்றாட வாழ்க்கையை சமாளிக்க முடியாமல் தட்டு தடுமாறிமுட்டி மோதி வாழ்க்கையை கழிக்கின்றனர்.

சில நேரம் இஸ்லாத்தை விட்டும் மீண்டும் வெளியேறும் நிலைகளும் அவர்களுக்கு ஏற்படுகின்றன. பராமரிப்புவழிகாட்டல்  இல்லாமையினால் புதிதாக இஸ்லாத்தில் இணைந்து கொண்ட பலர் தங்களுக்கு கடமையான வணக்கங்களை  கூட நிறைவேற்ற தவறி விடுகின்றனர். மேலும் பொருளாதார  வசதி மற்றும் சரியான வழிகாட்டல் இல்லாமையால் நோன்பு காலங்களில்  எத்தனையோ பேர் பர்லான நோன்பை கூட விட்டு விடுகின்றனர்.

இந்த பர்லான நோன்பை அவர்களில் அதிகமானவர்கள் வறுமையின் காரணமாகவே நோற்பதில்லைஸஹர் நேரத்தில் உண்ண உணவும் இல்லைஸஹர் செய்ய உணவு இருந்து நோன்பு நோற்றாலும் தான் நோற்ற நோன்பை திறப்பதற்கு உணவில்லை. எனவே இவ்வாறான நிலைமைகளை கருத்திக் கொண்டு இவ்வாரான நிலமைகளை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் எமது அமைப்பு பல திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது ,

அந்த வகையில் ஒரு கட்டமாக  புதிதாக தூய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட வறுமையில் உள்ள 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான ரமலான் மாதத்துக்குரிய தலா ஒரு குடும்பத்துக்கு  5000 ரூபா பெறுமதியான உணவுப் பொதிகள் வழங்கி அவர்களின் ரமலான் நோன்புற்குரிய  வழிகாட்டல் வசதிகலும் ஏற்பாடு செய்ய முன்னெடுத்துள்ளோம்.
உணவுப் பொதியில் உள்ளடக்கப்படவுள்ள உணவுப் பொருட்கள்
1.Samba Rice 

2.Sugar 

3.Chicken
4.Flour 
5.Cooking Oil
6.Milk Powder
7.Tin Fish(Large)
8.Dates
9.Instant Drink Powder
10.Tea Leaves

எனவே உங்களால் இயன்ற உதவிகளை வழங்கி மாபெரும் நன்மைகளை அடைய முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.  இத்திட்டத்திற்கான நிதி உதவிகள்  மே மாதம்(இம் மாதம்) 31ம் திகதிக்கு முன்னர் சேகரிக்கப்பட்டு இன்ஷா அல்லாஹ் ஜூன் 4 & 5 ஆகிய திகதிகளில் உணவுப் பொதிகள் ஒப்படைக்கப்படவுள்ளன.

உங்களால் சிறிய ஒரு உதவிதான் செய்ய முடிந்தாலும் செய்யுங்கள் அந்த உதவி உங்களின் பார்வையில் சிறியதாக இருக்கலாம் ஆனால் உங்களின் சிறிய உதவி ஒரு குடும்பத்தின் இப்தாரைஸஹரை பூர்த்தி செய்யும். 

BANK DEPOSIT
Commercial Bank - Akkaraipattu
Account Name - NM.Najath
Account Number - 8172005497

அந்த ஏழை மக்கள் நோன்பு நோற்கும் உணவு உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதாஅந்த ஏழை மக்கள் நோன்பு திறக்கும் பேரீச்சம் பழம் உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதாஅந்த ஏழை மக்கள் நோன்பு திறந்து அவர்களுடைய தாகத்தை தீர்க்க அவர்கள் குடிக்கும் பாணம் உங்களுடைய பணத்தில் வாங்கிக் கொடுக்கப்பட்டதாக இருக்கக் கூடாதா?

நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அல்லாஹ்வின் திருப்தியைப் பெறவே செலவிடுகிறீர்கள்;நல்லவற்றில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் உங்களுக்கே அது முழுமையாக வழங்கப்படும்நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்" (அல்குர்ஆன்: 2:272)

மேலதிக தொடர்புகளுக்கு-
0094752365958 - ACMYC MAIN ADMIN
0094772374138 - Ash Sheikh FAM.Aflal(Ihsani)
0094776060320 - Ash Sheikh AL.Ayyoob(Yoosufi)

இந்த திட்டத்திற்குரிய அனைத்து விடயங்களும் எமது இணையதளத்தில்(www.ACMYC.comபதிவிடப்படும்.


அன்பானவர்களே! இந்த விடயத்தை மற்றவர்களுக்கு எத்திவையுங்கள்! அவர்கள் உதவி செய்தாலும் அந்த நன்மை இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் கிடைக்கும் எனவும் தலைவர் நஜாத் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -