M.T. ஹைதர் அலி-
திருமலை மாவட்டத்தின், குச்சவெளி பிரதேச செயலகத்திற்கான பிரதேச அபிவிருத்தி குழுக் கூட்டம் 09.05.2016 ஆந்திகதி பி.ப. 02.30 மணியளவில் குச்சவெளி பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் திரு. தனேஸ்வரன் தலைமையில் இடம் பெற்றது.
இப்பிரதேச செயலக அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு திருமலை மாவட்டத்திற்கான அபிவிருத்தி இணைத்தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. அப்துல்லாஹ் மஹ்ரூப், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. சுசந்த பபுஞ்சிநிலம, பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ. இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அத்தோடு, மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.எம். அன்வர், லாகிர், ஜெனர்தனன் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகள், பாதுகாப்பு படையினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.