முதல் ஆளாக வந்து வாக்களித்த ரஜினி, அஜித் - ஓட்டுப் போட முடியாத சூர்யா

ட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கும் வாக்குப் பதிவு மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் நடிகர் அஜித் இன்று வாக்குப் பதிவு தொடங்குவதற்கு முன்பே முதல் ஆளாக வந்து சென்னை திருவான்மியூரில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது வாக்கை பதிவு செய்ய வந்திருந்தார். அஜித் வருகிறார் என்றதும் அவரது ரசிகர்கள் வாக்குப் பதிவு மையத்தின் முன் திரளாக திரண்டிருந்தனர்.

அஜித் வாக்கு பதிவு மையத்திற்கு வந்ததும் அவரது ரசிகர்கள் அவரைப் பார்க்க முண்டியடித்துக் கொண்டனர். பின்னர், அஜித்தை போலீசார் பத்திரமாக வாக்குப் பதிவு மையத்திற்குள் அழைத்து வந்தனர். பின்னர், சிறிது நேர காத்திருப்புக்குப் பின் அஜித் தனது வாக்கை பதிவு செய்தார். அஜித்துக்கு முன்னதாக சிலர் வாக்கு பதிவு செய்ய காத்திருந்தனர். பின்னர், அஜித் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஷாலினி மற்றும் அவரது அம்மாவும் தங்களது வாக்கை பதிவு செய்தனர்.

அதேபோல், நடிகர் ரஜினிகாந்தும் காலையிலேயே தனது வாக்கை பதிவு செய்தார். வாக்கை பதிவு செய்ய வந்த ரஜினியை பார்க்கவும் ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். வாக்கை பதிவு செய்தபின் ரஜினி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். காலையிலேயே முன்னணி நடிகர்கள் தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற முன்வந்து தங்களது வாக்கை பதிவு செய்து பலருக்கும் முன்னுதாரணமாக இருந்துள்ளனர்.

நடிகர் சூர்யா தேர்தலில் அனைவரும் தவறாமல் ஓட்டுபோட வேண்டும் என்பதை வலியுறுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். ஆனால், தற்போது அவராலேயே ஓட்டுப் போட முடியாத சூழ்நிலை உருவாகியிருக்கிறது.

வெளிநாடு சென்றுள்ள அவர், தேர்தல் நடைபெறும் தேதியில் சென்னைக்கு வரமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அவரால் இந்த தேர்தலில் ஓட்டு போட வரமுடியவில்லை. இதற்காக அனைவரிடமும் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில் அவர் கூறி இருப்பதாவது:- ‘24’ படத்திற்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும், ஆதரவுக்கும் என் மனப்பூர்வமான நன்றி. நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னிடம் மன்னிப்பையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்முறையாக என்னுடைய வாக்குரிமையை நிறைவேற்ற இயலாத சூழ்நிலையில் இருக்கிறேன். அது எனக்கு குற்றவுணர்ச்சியையும், வருத்தத்தையும் அளிக்கிறது. அதற்காக அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்களிக்கும் உரிமையை, கடமையை அனைவரும் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணம் உடையவன் நான். இதுவரை ஒவ்வொரு தேர்தலிலும் என்னுடைய வாக்குரிமையை செலுத்தாமல் நான் இருந்தது இல்லை. இந்த முறை வெளிநாட்டிலிருந்து தேர்தலுக்கு முதல்நாளே சென்னைக்கு வந்துவிட வேண்டுமென்று பயண திட்டம் வகுத்திருந்தேன். ஆனால், நானே எதிர்பார்க்காத சூழல், என் பயணத்தைத் திட்டமிட்டப்படி மேற்கொள்ள இயலவில்லை.

என் சூழ்நிலையை விளக்கி, அஞ்சல் மூலம், இணையம் மூலம் வாக்களிக்க முடியுமா என அனைத்து முயற்சியையும் மேற்கொண்டேன். சட்டப்பூர்வமான வழிகள் எதுவும் இல்லை. மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதிற்காக, அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமான மன்னிப்பைக் கேட்டுக் கொள்கிறேன்.

என் மீது அன்பு கொண்ட அனைவரும், என்னை புரிந்து கொள்ளவும், பொறுத்துக் கொள்ளவும் வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -