பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற கைகலப்பு சம்பவம் தொடர்பில் கட்சியால் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படின் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் பாராளுமன்ற உறுப்புரிமை பறிபோகக் கூடும் என அக்கட்சியின் பொருளாளர் அமைச்சர் எம்.பீ.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று ஏற்பட்ட குழப்ப நிலைமைக்கு காரணமாக இருந்தவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க கட்சிக்கு அதிகாரம் உள்ளதாகவும், அவ்வாறான ஒரு நடவடிக்கைக்கு பிரவேசிப்போமேயானால் அவர்களை கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம் காணப்படுவதாகவும் அமைச்சர் எம்.பீ. திசாநாயக மேலும் தெரிவித்தார்.