பறக்கத் சுற்றுப்போட்டி அங்குரார்ப்பணம்...!

ஷியாகுல் ஹக்-
மிழ் - முஸ்லிம் ஒற்றுமைக்காய் முன்னின்று தன் உயிரை பழிகொடுத்த மர்ஹூம் யூ.எல். ஆதம்பாவா (பறக்கத்) அவர்களின் மறைவின் 25வது ஆண்டை நினைவுகூறும் வகையில் கல்முனை றினோன் விளையாட்டுக் கழகத்தினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இருபதுக்கு 20 ஓவர்கள் கொண்ட கடின பந்து கிரிக்கட் இச்சுற்றுப்போட்டி நேற்று (07) அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டுள்ளது.

றினோன் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் றிஷாட் செரீப் தலைமையில் கல்முனை சந்தாங்கேணி ஐக்கிய விளையாட்டுமைதானத்தில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற இந்த அங்குரார்ப்பண நிகழ்வில் மாநகர சபை உறுப்பினர் ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.ஏ. கப்பார், முன்னாள் விளையாட்டு போதனாசிரியல் எம்.ஐ.எம். முஸ்தபா மற்றும் கழகங்களின் பிரதிநிதிகள், பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

26 கழகங்கள் கலந்து கொள்ளும் இச்சுற்றுப்போட்டி விலகல் முறையில் வெற்றியீட்டும் கழகத்திற்கு பெறுமதிவாய்ந்த பறக்கத் கிண்ணத்துடன் ரூபா 20,000.00 பணப்பரிசும் வழங்கப்படவுள்ளது.

இச்சுற்றுப்போட்டியின் முதலாவது போட்டியில் கல்முனை ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து சாய்ந்தமருது பிலேயின்ஹோஸ் விளையாட்டுக்கழகம் போட்டியிட்டது. முதலில் துடுப்பெடுத்தாடிய பிலேயின்ஹோஸ் 20 ஓவர் நிறைவில் 138 ஓட்டங்களை 8 விக்கட் இழப்பிற்குப் பெற்றுக் கொண்டது.

139 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய கல்முனை ஜிம்கானா அணியினர் 20 ஓவர்கள் நிறைவில் 110 ஓட்டங்களை 8 விக்கட் இழப்பிற்குப் பெற்றுக் கொண்டது. இதனால் 29 ஓட்டங்களால் சாய்ந்தமருது பிலேயின்ஹோஸ் விளையாட்டுக்கழகம் இப்போட்டியில் வெற்றியை தமதாக்கிக் கொண்டனர்.

இப்போட்டியில் தோல்வியடைந்து இச்சுற்றிலிருந்து விலகிக் கொண்ட ஜிம்கானா விளையாட்டுக் கழகத்தினல் றினோன் விளையாட்டுக் கழகத்தினரால் 2002ம் ஆண்டு நடாத்தப்பட்ட பறக்கத் ஞாபகார்த்த சுற்றுப்போட்யின் சம்பியனாக தெரிவாகியமைய இங்கு குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -