களனி கங்கையில் நீர் அதிகரிக்கிறது - பல பிரதேசங்களில் மின் வெட்டு

ல பிரதேசங்களில் மின் கம்பிகள் விழுந்திருப்பதனால் கொலன்னாவ பிரதேசத்தில் சில பகுதிகளுக்கான மின் விநியோகம் தடைப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார தனியார் நிறுவனம் கூறியுள்ளது. 

மின் கம்பிகள் கீழே விழுந்திருப்பதனால் மக்களுக்கு ஆபத்துக்கள் ஏற்படலாம் என்ற காரணத்தினால் மின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, சீதுவ, ஒருகொடவத்தை, வென்னவத்தை, மீதொட்டமுல்ல, சேதவத்தை, ஒருகொடவத்தை உள்ளிட்ட பல பிரதேசங்களில் இவ்வாறு மின் விநியோகம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இவ்வேளை களனி கங்கையின் நீர்மட்டம் தற்சமயம் அதிகரித்துக் கொண்டிருப்பதனால் ஆற்றின் இரு பக்கமும் வசிக்கும் மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. 

தாழ்ப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வது சிறந்தது என்று அந்த நிலையம் கூறியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -