எஸ்.எம்.சன்சீர்-
இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வரிப்பத்தான்சேனை இன்டகொம் சணச நிறுவனத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட ரூபா 25,000 பெறுமதியான நூல்கள் வரிப்பத்தான்சேனை பொது நூலகத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
நூல்களை நிறுவனத்தின் தலைவர் யூ.எல்.சுலைமாலெவ்வை, செயலாளர் ஏ.என்.எம்.கிஸ்மி, இறக்காமம் பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் மற்றும் நூலகர் ஏ.ஆர்.எம்.இல்யாஸ், உதவி நூலகர் எச்.எல்.எம்.சஹீட், ஆகியோரிடம் கையளிப்பதையும் ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் எஸ்.உதுமா லெவ்வை Dr.கணி, Dr.முபாறக் ஆகியோரையும் படத்தில் காணலாம்.