வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களையும் வீதிகளையும் பார்வையிட சென்ற சிப்லி பாறுக்...!



M.T. ஹைதர் அலி

டந்த இரு நாட்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்துவரும் அடைமழை காரணமாக தாழ்ந்த பகுதிகளில் வாழும் மக்கள் வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல வீதிகளும் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளதோடு, அவர்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2016.05.08ஆந்திகதி (இன்று) காத்தான்குடியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களையும் மக்களையும் நேரில் சென்று பார்வையிட்ட மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் சிப்லி பாறுக் மக்களின் நலன்கருதி அவசரமாக செப்பனிடப்பட வேண்டிய வீதிகளையும் அடையாளம் கண்டுகொண்டதோடு, இவ்வீதிகளை புணரமைப்பதற்கு தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொள்வதாக பொதுமக்களிடம் குறிப்பிட்டார்.

மூன்று நாட்கள் தொடர்ச்சியாக பெய்த அடைமழை காரணமாக மக்கள் இடம்பெயர்ந்தால் மாத்திரமே அரச உதவிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்கிற இக்கட்டான நிலை காணப்படுவதோடு, இயலுமான அளவுக்கு உதவிகளை பெற்றுக்கொடுக்க முயற்சிப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே மட்டு மாவட்டத்தில் இருக்கின்ற தனவந்தர்கள், சமூக நலன் விரும்பிகள் மற்றும் சமூகசேவை போன்ற அமைப்புக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வெள்ள நீர் புகுந்துள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு தங்களின் உதவிகளை வழங்கி அம்மக்களின் கஸ்டத்தை ஓரளவேனும் குறைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென மாவட்டத்தில் அங்கம் வசிக்கும் சமூகசேவை அமைப்புக்களை கேட்டுக்கொண்டார்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -