ஜனாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் விழிப்புணர்வு செயற்திட்டம் மலையகத்தில்..!

பா.திருஞானம்-
னாதிபதி மதுபான நிவாரணப்பிரிவின் கீழ் மதுபானம், சிகரட் உட்பட மதுபாவனையிலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு செயற்திட்டம், கொத்மலை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்து அரச ஊழியர்களுக்கும் தெளிவுப் படுத்தி அவர்களூடாக மக்களுக்கு அறிவுறுத்தும் செயற்திட்டம் நேற்று (11) கொத்மலை மைதானத்தில் நகர நடைபெற்றது. 

இதற்கு ஜனாதிபதி செயலகத்தின் மதுபான நிவாரணப்பிரிவின் அதிகாரிகள், கொத்மலை பிரதேச செயலாளர், மதுவரி திணைக்களம், தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபை, பொலிஸ் அதிகாரிகள், மதத்தலைவர்கள், கல்வி அதிகாரிகள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர். மதுபானம், புகைப்பிடித்தல் காரணமாக ஏற்படும் தீங்குகள் குறித்து அதிதிகள் உரையும் வீதி நாடகமும் நடைபெற்றது. 

தொடர்ந்து அரச ஊழியர்களினால் கொத்மலை சந்தைத் தொகுதி வர்த்தக நிலையங்களில் மது ஒழிப்பு தொடர்பான துண்டு பிரசுரங்கள், அறிவுறுத்தல்கள்; வழங்கப்பட்டதுடன் பொது மக்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம் ஒன்றும் நடைபெற்றது. இந்த ஊர்வலம் கொத்மலை நகரில் ஆரம்பித்து தவலந்தன்ன நகரம் வரையும் சென்றது. 

இச் செயற்திட்டத்தின் ஊடாக சிகரட் மற்றும் மதுபானப் பாவனை உண்டாகுவதற்கான காரணம், உடல், உள பிரச்சினைகள், சமூக சீர்கேடுகள், தடுப்பதற்கான முறைகள், சிகரட் மதுவற்ற எதிர்கால சமூகம், போன்றவையும் விழிப்புணர்வு படுத்தப்பட்டது. இச் செயற்திட்டம் போதை தடுப்பு தொடர்பான ஜனாதிபதி செயலக மக்கள் தொடர்பு அதிகாரி நளின் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -