தையல் அவள்
தைக்காத தையலும்
இல்லை அவளை
தைக்காத வறுமையுமில்லை..
பொய்யாக நடிப்பதுமில்லை
பொல்லார் சொல் கேட்பதுமில்லை
மெய் சிலிர்க்கும் அவளின்
அன்பினில் நனைகையில்..
மங்கையாய் மடந்தையாய்
இருந்தாலும் பேதையவளும்
பெருமையடைகிறாள்
தாய்மையினை அடைகையில்...
தாரமாய் அவதாரமாய்
நல்ல சேவகியாய்
வாழ்க்கை துணையாய்
எத்தனையோ பாத்திரம் ....
கோபமும் பாசமும்
கொஞ்சும் அழகும்
கெஞ்சும் எம் நெஞ்சம்
தாயிடமிருந்து பெற்றிடவே...
வெற்றியும் தோல்வியும்
வாழ்வின் வறுமையும்
உணரும் வெறுமையும்
தொலைந்தே போகும் தாய்மடியில்..
அம்மம்மா எத்தனைதான்
உன் பெருமை
அத்தனைக்கும் கவிபாட
அவதரிப்பேனோ
நானும் ஒரு தாயாய்...
வார்த்தைக்கு பஞ்சம்
அதனால் கொஞ்சம்
கவிபாடி முடிக்கும்
என் நெஞ்சம் ...
வாழ்க தாய்மை வாழ்க பெண்மை...
இப்படிக்கு றிஸ்லி சம்சாட்...